பக்கம்:அறுந்த தந்தி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 . அறுந்த தக்தி

யாரோ ஒரு கதர் ஜிப்பா போட்ட கனவானிடம் போய், சம்ப்ள்ம்...” என்று கேட்டுவிட்டு கின்ருன் ; வாக்கியத்தை முடிக்கவில்லை. அவன் கண்களில் நீர் ததும்பியது. புதிய காரியத்தில் தைரியம் வராததுதான் காரணம். அவரோ, அவன் உண்மையில் கஷ்டப்படுகிற வனென்று கினைத்துக்கொண்டார். 'என்ன வேண்டும் ??? என்று அன்பொழுகக் கேட்டார். சம்பளம் கொடுக்கப் பணம் இல்லை” என்று, உருப்போட்டு வைத்திருந்ததைத் தட்டுத் தடுமாறி ஒப்பித்தான். அவன் தொண்டை கா கரத்தது; குரல் தடுமாறியது. அவ்வளவும் அவனுக்கு ஆத கூலமாகவே முடிக் தன. அந்த மனுஷருடைய உள்ளத்திலே கருணை சுரக்கச் செய்தன. முழுசாக ஒரு ரூபாய் அவன் கையில் விழுந்தது. அவன் திடுக்கிட்டுப் போனன். நம்பக் கூட முடியவில்லை. ஒரு ரூபாய்! எட்டு நாளைக்குக் கொடுக்க லாம் - அந்தப் பிச்சைக்காரிக்குத்தான்.

அவன் அந்தத் தொழிலைப் பழகிக்கொண்டான். ஆனலும் தர்மத்தின் பொருட்டுத்தான் பழகினன். பஸ் அடியில் யாசகம்; ஆலமரத்தடி யில் தர்மம்.

தந்திரம் செய்யவேண்டுமென்று வந்துவிட்டால் அதற்கு ஏற்ற அறிவும் தானுக வந்துவிடுகிறது. அவன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒரே இடத்துக்குப் போவதில்லை. சென்னப்பட்டணத்தில் இடத்துக்குத்தான குறைச்சல்? அவனுடைய முகவிலாசமும் தோற்றமும் சிலருக்குச் சந்தேகத்தை உண்டாக்கின; சிலருக்கு இாக்கத்தை எழுப்பின : சிலருக்குக் கோபத்தை உண்டாக்கின. அவன் எத்தனையோ அது பவங்களைப் பெற்ருன். அவமதிப்பை அடைந்தான். ஒவ்வொரு தடவையும் அவன் உள்ளம் போராடியது. ஆலுைம் விடாப்பிடியாகத் தன் காரியத்தைச் சாதித்தே வித்தான்.

அதிகப்படியான காசு வந்தால் சில நாள் பிச்சைக்' காரிக்குக் கூடக் கொடுப்பான். ஒவ்வொரு நாளும் அவளுக் குத் தவருமல் பணம் கொடுக்கத் தக்கபடி அவன் கணக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/69&oldid=535310" இலிருந்து மீள்விக்கப்பட்டது