பக்கம்:அறுந்த தந்தி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கார்த்திகை விளக்கு 7 l.

வாங்கி வந்திருந்தார். ஐப்பசி மாசம் அது. தீபாவளி பக்கத் தில் இருந்தமையால் சீதாலக்ஷ்மிக்கும் விசாலத்துக்கும் பல பல ரகமான துணிகளை வாங்கி வந்தார். வாங்கினது பெரிதல்ல; எப்படியோ சாமர்த்தியமாகப் புதுச்சேரி எல்லேயிலுள்ள சுங்க அதிகாரிகளுக்குத் தப்பி அவைகளை ஊருக்குக் கொண்டுவந்து சேர்த்துவிட்டார். அதற்கு அவருக்கா தத்திரம் தெரியாது? புதுச்சேரிப் பிரமுகர்கள் அவரை விழுப்புரம் வரையில் ஒரே கூட்டமாகக் கொண்டு வக்து வழியனுப்பினர்கள் ; வழியனுப்பும்படி அவச் செய்துவிட்டார். ஒரு படையே அவ்வளவு துராம் உடன் வந்தபோது புதுச்சேரி சகரத்தையே கொண்டு வந்து விடலாமே!

கொண்டுவந்த சாமான்களை யெல்லாம் எண்பர்களுக் குக் காட்டினர். துணிமணிகளைப் பார்த்த ஊரார் பிரமித் துப் போனர்கள். ஐயோ! பார் கண்ணுவது படப்போகி றதே! என்று விசாலம் உள்ளத்துள் பயந்தாள். தன் லுடைய கண்ணே படும்போல் இருந்தது அவளுக்கு. 'ாகு ராமா! தோன் காப்பாற்றவேண்டும்!” என்று ஒவ்வொரு பொருளாக எடுத்து உள்ளே வைத்தாள். சாஸ்திரிகள் ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டித் தம் பெருமையையும், யார் அதைத் தந்தாரென்பதையும் விசாலத்துக்குக் கதை கதையாகச் சொன்னர். பத்து வயசுப் பெண்ணுக இருந்த சீதாலக்ஷ்மி எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து மகிழ்ச்சி யால் பூசித்தாள். அப்பா சொன்னதைக் கேட்பதைவிட அந்தப் பண்டங்களை எடுத்தெடுத்துத் திருப்பித் திருப்பிப்

பார்ப்பதிலேதான் அவள் மனம் ஈடுபட்டிருந்தது.

'இந்தக் குத்துவிளக்கைப் பார். இது மிகவும் அருமையானது. இதைப் புதுச்சேரியிலே செய்து பூர் ராமசந்திர மூர்த்திக்கு முன் நான்கு நாள் தான் ஏற்றி வைத்தேன். புதிதாக இருந்தால் சுங்க அதிகாரிகள் வரி போடுவார்கள். அதற்காக என் பூஜைச் சாமான்களோடு சேர்த்து வைத்திருந்தேன். நாலு நாள் ஏற்றி எண்னெ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/78&oldid=535318" இலிருந்து மீள்விக்கப்பட்டது