பக்கம்:அறுந்த தந்தி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 அறுந்த தந்தி

யும் கரியும் படச் செய்தேன். இதை நன்முகத் துலக்கி ஜாக்கிாதையாக வை; இதை வரும் கார்த்திகைக்கு பூரீ ராமசந்திர மூர்த்திக்குமுன் ஏற்றி வைத்து ஒரு ஸஹஸ்ரநாமம் செய்ய வேண்டும். இந்த விளக்குக்கே லக்ஷ்மி ஸஹஸ்ரநாமம் செய்யவேண்டும். லசஷ்மீகாம் நிறைந்த விள்க்கு இது” என்று அந்தப் புதிய வெள்ளி விளக்கைப்பற்றி அவர் சொன்னர். அப்போது அவரு டைய முகத்தில் உண்டான ஒளி, அந்த விளக்கைப்பற்றி அவர் எவ்வளவு பெருமையாக எண்ணுகிருரென்பதைத் தெரிவித்தது.

懿 癸

திடீரென்று, பத்து நாள் வந்து சீதா கல்யாணம் சொல்லவேண்டுமென்ற திருநெல்வேலியிலிருந்து சாரா யண சாஸ்திரிகளுக்குத் தந்தி வந்தது. தீபாவளிக்கு மறு நாளே புறப்பட்டுவிட்டார். போகும்போது, குத்து விளக்கை வெளியில் எடுக்காதே; நான் வந்ததும் எடுத்துக் கார்த்திகைக்கு ஏற்றலாம்” என்று சொல்லிவிட்டுப்

பானா. +

திருநெல்வேலிக்குப் போய்ச் சீதா கல்யாணப் பிரசங் கம் ஆரம்பித்தார். முன் கதை கடந்து வந்தது. ராமா வதாரம் முதல் சீதா கல்யாணம் வரையில் பத்து நாள் செய்வதென்றும், ஐந்நூறு ரூபாய் சம்மானம் செய்வ தென்றும் பேச்சு. ஒன்பதாவது நாள் பூரீ ராமபிரான் சிவதனுசை முறிக்கும் கட்டம். அதை முடித்துச் சீதா கல்யாணத்தைச் சுருக்கமாக மறுநாள் சொல்லிச் சம்மானங் களைப் பெறவேண்டும். அந்த ஒன்பதாம் நாள் நாராயண சாஸ்திரிகள் பிரசங்கம் செய்துகொண் டிருந்தபோது திடீரென்று மாாடைத்து, நீ ராமசந்திர மூர்த்தியின் சாணங்களை அடைந்துவிட்டார். ஊரெல்லாம் கலகலத்துப் போய்விட்டது.

சீதா கல்யாணம் நாராயண சாஸ்திரிகளின் வியோக மாக முடிந்தது. விசாலாக அம்மாளுக்குத் தக்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/79&oldid=535319" இலிருந்து மீள்விக்கப்பட்டது