பக்கம்:அறுந்த தந்தி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 அறுந்த தந்தி

இந்த ஆறுதல் வார்த்தையே ஹம்வராஜாவினுடைய துயரத்தைக் கிளறிவிட்டது. விம்மல் அதிகமாயிற்று. மெல்லத் தலையெடுத்துப் பார்த்தது. சிறிது கோம் பேச முடியவில்லை. பிறகு, போதும், அந்தப் பாக்கியம். இனி, பிாம்மதேவர் வேறு வாகனத்தை ஏற்றுக்கொள்ளட்டும். எனக்கு அந்தப் பதவி வேண்டாம். எங்கள் இனத்திற்கே வேண்டாம். பூவுலகத்தில் வாத்தோடும் நாரையோடும் சேர்ந்து நத்தையையோ மீனையோ கொத்தி வயிறு வளர்த் துக்கொள்கிறேன். உண்மையாகச் சொல்கிறேன், தாயே! என் பதவியை வாங்கிவிட ஏற்பாடு செய்யவேண்டும். போதும் நான் பட்ட சுகம் !’’

தேவி புன்முறுவல் பூத்தாள் ; 'பாவம்! எப்போதும் ராஜயோகத்திலே இருப்பவர்களுக்கு ஒரு சிறு துக்கம் வந்தாலும் பூகம்பம் வந்ததுபோல நடுக்கிவிடும். நீ ராஜ யோகம் உடையவன். உனக்குத் துக்கத்தின் சாயை லேசங்கூடத் தெரியாது. ஏதோ சிறு புாைசல் எங்கோ நிகழ்த் திருக்கிறது. அது உனக்கு இவ்வளவு காபத்தை உண்டாக்கியிருக்கிறது. நடந்தது என்ன? சொல்” என்று

அன்போடு விளுவினுள்.

"தாயே, பூவுலகத்தில்தான் ஏழையென்றும் செல்வ னென்றும், கூலிக்கானென்றும் எஜமானனென்றும், உயர்ந்த ஜாதியென்றும் தாழ்ந்த ஜாதியென்றும் பிரிவுகள் இருக்கின்றன என்று கேட்டிருக்கிறேன். பேதமில்லாத பொதுவுடைமை ராஜ்யம் செர்ர்க்கமென்றே நம்பியிருக் தேன். இங்கேயும் பேதம் உண்டென்று இப்போது தெரின்துகொண்டேன்; உயர்வு தாழ்வு உண்டென்று உணர்ந்துகொண்டேன்.’’

'விஷயத்தைச் சொல் , எதற்காகக் காடு சுற்றுகிருப்? உன்னுடைய தாபத்தால் தோன்றிய உணர்ச்சிகளைக் கொட்டாதே. அதற்கு மூலமான சம்பவத்தைத் தெரிவி மற்றதையெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன்.' -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/99&oldid=535338" இலிருந்து மீள்விக்கப்பட்டது