பக்கம்:அறுபத்து மூவர் துதிப்பா.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
7

எம்பிரான் அடியவர்கள் தம்பிரான் ஏகம்பன்
எந்துதன் மலர்க் கரத்தால்
சிந்திடா வண்ணமே பிடித்துத் தடுக்குமத்
திருவருட் பேறு பெற்ற
திருக்குறிப் புத் தொண்டர் அருட்குறிப் பைச் சிந்தை
சேர்த்துக் களித்து மகிழ்வாம்.

19. சண்டேசுர நாயனார்

புரிசிவ பூஜைக் குற்றபாற் குடத்தைப்
பொருக்கென வந்து தன் தாதை
தரிசினத் தோடும் இடறிடக் தாதை
யெனுதவன் தாளற வீசி
எரிசடை யிறைநிர் மாலியம் கொண்டர்க்
கிறை யெனும் இனியநற் பதவி
பரிசிலாப் பெற்ற குரிசில் சண்டேசர்
பதமலர் நிதநினைந் துய்வாம்.

20. திருகாவுக்கரசு நாயனார்

அஞ்செழுத் தெனும்புணை கொண்டு நீர்க்கடல்
அதனுடன் பவக்கடல் கடந்து நின்றவர்
வஞ்சனை அமன்சுழல் விட்ட மாதவர்
வாசியி லாததோர் காசு பெற்றவர்
செஞ்சவே மறைக்கத வம்பி ரித்தவர்
தீவிடந் தீர்த்தவர் கயிலைக் காட்சியை
உஞ்ச ஐயாற்றினிற் கண்ட உத்தமர்
ஒப்பிலா அப்பரை உன்னி உய்குவாம்.