இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காழி மா நகர் வந்துதித்தவர்
கவுரி பாலமு துண்டவர்
கான முந்தமி ழுந்துலங்கிடு
கவிக ளேபொழி நாவலர்
கன்மி தந்திட ஓதி உய்ந்த அக்
கவியை "அப்பரே" என்றவர்
பாழி தாளாநற் சிவிகை சின்னமும்
பந்தரும் பெறு பாவலர்
பனிச்சு ரம்முயல் விடமொழித்தவர்
பாடியே பெறு காசினர்
பண்டை மாமறை கதவ டைத்தவர்
பாண்டி யற்கருள் செய்தவர்
ஆழி மாகடல் அன்ன கூடலில்
அமணிருட்டை அகற்றினோர்
ஆற்று நீரும்நெ ருப்புமே மொழி
ஆணை யிற்செல வைத்தவர்
ஆண்ப னையது காய்க்க வைக்தவர்
ஆயி ரம்பொன்கள் பெற்றவர்
எழுலோகமும் அற்பு கங்கொள
என்பு பெண்ணுரு ஆக்கினோர்
எழில் மணத்திடை வந்த வர்க்கெலாம்
ஈறில் நற்பதம் ஈந்தவர்
எந்தை ஞானசம் பந்த மூர்த்தியே
என்னு யிர்த்துணை யாவரே.