பக்கம்:அறுபத்து மூவர் துதிப்பா.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது36

வேள்விகள் செய்தவராய்த் திகழ்ந்த சிறப்புலியின் கழல்களை ஏத்துவாம்.

35. சிறுத்தொண்ட நாயனார்

மகா விரதியர் ஒருவர் உண்பதற்காகக் தம் மகனையே அரிந்து சமைத்த வீர சூரரானன சிறுத்தொண்டரது பெருமையைக் கூறுவோம்.

36. சேரமான் பெருமாள் நாயனார்

தமது பூஜை முடிவில் கூத்தப் பிரானது நடனச் சிலம்பொலி கேட்கப் பெற்றவரும், ஆரூரது தோழராம் உரிமை பெற்றவரும், கயிலையில் திருவுலாப் பாடிய பேறு பெற்றவருமான சேரமான் பெருமாளது புகழ் செப்பும் தரத்ததோ !

37. கணநாத நாயனார்

சிவனடித் தொண்டை உலகிற் பரப்பமுயன்றவரும், சம்பந்தப் பெருமானது திருவடியைப் பரவிப் போற்றி வந்தவருமான கணநாதரை நித்தமும் வாழ்த்தி வணங்குவாம்.

38. கூற்றுவ நாயனார்

அநேகம் பகைவர்களைக் தாம் வென்றிருந்தும் தில்லை வாழ் அந்தணர்கள் தமக்கு முடி சூட்ட மறுப்பதைக் கண்டு சோர்ந்த போது, இறைவரே கனவில் வந்து அவர்தம் பாதமலர்கலத் தம் முடியிற் சூடும் பேற்றினைப் பெற்று ஆட்சி நடத்திய கூற்றுவ நாயனாரின் குணத்தைப் பரவி மகிழ்வாம்.