மலரைச் சிந்திய யானையை வதைத்த எறிபத்த நாயனாரின் உண்மைப் பத்தி நிலையைக் கண்ட ஞானியும், போரில் இறந்த பகைவர் ஒருவரது புன்சடையைக் கண்டு மனங் கலங்கி எரியில் வீழ்ந்தவருமான புகழ்ச் சோழரது திருநாமத்தை ஆசையுடன் என் நாவிற் சொல்லும் நன்னாள் என்று வருமோ என்பேன்.
அருவருப்பான காமக் குறிகளைஓரடியாரிடத்தே கண்டும் திருநீறணிந்த இவர் எம்பிரான் அடியார் என்று அவரைப் பணிந்துபசரித்த நரசிங்க முனையரின் திருவடி மலரே நான் முப்போதும் முடியிற் சூடும் மலராம்.
தாம் வீசிய வலையிற் கிட்டிய மீனொன்றைச் சிவ பிராற்கு ஆகுக என்று கடலிலே விடும் ஒழுக்கத்தைக் கைவிடாது பற்றி வருநாளில் ஒரு நாள் நவரத்ன மயமான மீனொன்று கிட்டப் பின் வாங்காது அதையும் கடலில் விடுத்த அதிபத்தரான அதிபத்த நாயனாரின் பாதத்தை அதி பத்தியொடும் பரவுவாம்.
வந்த அடியார்களே உபசரத்துக் கால் கழுவும் போது, ஓரடியாரைக் கண்டு இவர் முன் நம்மிடம் வேலையாளாய் இருந்தவரல்லவா என்று: சிந்தித்துத் தம் மனைவி சிறிது தாழ்க்கக், கோபங் கொண்டு மனைவியின் -