ஓணகாந்தன்தளியில் இறைவனைப் பாடிப் பொன் பெற்றவர் யார்?
திருவொற்றியூரில் சங்கிலியை மகிழ மரத்தின் கீழ்த் திருமணஞ் செயப் பெற்றவர் யார்?
சொன்ன சொல் தவறிய குற்றத்தாற் கண்ணின் ஒளியை இழந்து வருந்தி என் குற்றத்தைப் பொறுத்தருளுக என வேண்ட ஊன்றுகோல் ஒன்று இறைவன் தரப் பெற்றவர் யார் ?
காஞ்சியில் ஒரு கண்ணின் பார்வையைப் பெற்றவர் யார்?
திருத்துருத்தியில் திருக்குளத்திற் குளித்து உடலில் உற்றநோய் விலகப் பெற்றவர் யார் ?
திருவாரூரில் இறைவனெடு மன்றாடி ஊடி மற்றைக் கண்ணின் பார்வையும் பெற்று மகிழ்ந்தவர் யார் ?
பரவையாரிடம் சிவபிரானைத் துாதனுப்பின நேயர் யார்?
இறைவனை இப்படித் தூதனுப்பினவருடைய முகத்தை நான் பாரேன் என்று ஏசின எயர்கோன் கலிக்காம நாயனாருடைய நட்பை இறைவன் திருவருளாற் பெற்றவர் யார் ?
தம்மை நாடிவந்த சேரமானது, நட்பைப் பெற்றவர் யார்?
காவிரியின் வெள்ள நீரை வழி விடும்படி செய்து திருவையாற்றைத் தரிசித்தவர் யார்?
சேரமான் அளித்த பொன்னுதிய பொருள்கள் வழியிலே பறிக்கப்பட்டு பின்பு இறைவன் அருளால் திரும்பிவரப் பெற்றவர் யார்?