உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறுபத்து மூவர் துதிப்பா.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
2
3. இளையான்குடி மாற நாயனார்

மின்னாவரு மழையிற் செநெல் வேகங்கொடு வந்தே
கன்னாயக அடியாருண நானாவிதங் கறிசெய்
என்னாமனே யாளுக்குரை இளையான்குடி மாறன்
பொன்னார்கழல் என்நாவினில் போற்றிப்பணி வேனே.

4. மெய்ப்பொருள் நாயனார்

★பொய்வேடம் மெய்வேடம் போலவே பூண்டாலும்
உய்வேடம் கண்ட உணர்வுடையார்-மெய்வேண்டிக்
தத்தா நமர்என்ற தத்துவத்தார் 'மெய்ப்பொருள்' சீர்
★★நத்தா மகிழ்ந்திடுவேன் நான்.

5. விறன்மிண்ட நாயனார்

அடியாரை வணங்காத ஆரூரன் புறகே
அவன்நாடும் ஆரூரெம் பெருமானும் புறகே
படியார்கள் அறிமின்கள் எனவன்மை பேசிப்
பண்பூட்டுஞ் சீராளன் பெரும்பத்தி யாளன்
செடியாய வல்வினைகள் திர்க்கின்ற தெய்வத்
திருத்கொண்டர் தொகைபாட முன்வைத்தபெரு
கடியாரும் பொழில் சூழும் செங்குன்றுார் வந்த (மான்
கண்னாளன் விறன்மிண்டன் என்நாளும் வாழ்க.

6. அமர்நீதி நாயனார்

நனைகோவ ணத்தோடும் உள்ளேன் முன்
நான்தந்த தரமிக்க நலகோவணம்
தனைவேக மாக்கொண்டு வா என்ன
அதுகாண மாட்டாது தடுமாறிட


★திருமந்திரம் 1660. ★நந்தா=நந்தி