10
ளாகிய பெருந்தகைமையே யென்பது இனிது புலனாகும். எ-று.
அதுவே—ஆளாதலாகிய ஒன்றையே நினைந்திருத்தலும், துணிதலும், உள்ளத்திற் செறித்தலும் ஆகிய அவ்வுபாயமே. இரண்டாமடியில் அதுவேயென்றது, அவ்வுபாயம் கைவரப்பெறுதற்குரிய மூல காரணமாகிய திருவருளை ஈற்றடி யிலுள்ள தகவு என்பதனை அதுவே என்னும் தனிச் சொல்லுடன் இயைத்துரைக்க, தகவு-திருவருளால் எளிவந்து தோன்றி எல்லாவுயிர்களையும் உய்வித்தருள வல்ல பெருந்தகைமை. ‘நகவே ஞாலத்துட் புகுந்து நாயேயனேய நமையாண்டதகவேயுடையான்’ என்பது திருவாசகம். ‘பனிக்கு அணங்கு கண்ணி’ என்ற தொடர்க்கு, குளிர்ச்சி பொருந்திய கார் காலத்தில் மலரும் கொன்றை மலர்மாலை எனவும், கங்கையின் குளிர்ச்சிக்கு வருந்தும் கொன்றை மலர்மாலை எனவும் பொருள் கூறுதலும் உண்டு. ஒள் நுதலின் மேல் ஓர் தனிக்கண் அங்கு வைத்தார் எனப் பிரித்துரைக்க.
தகவுடையார் தாமுளரேற் றாரகலஞ்சாரப்
புகவிடுதல் பொல்லாது கண்டீர்—மிகவடர
ஊர்ந்திடுமா நாகம் ஒருநாள் மலைமகளைச்
சார்ந்திடுமேல் ஏபாவந் தான்.
(13)
இ-ள்: நுமது திருமேனியில் ஊர்ந்து செல்லும் பாம்பானது என்றேனும் ஒருநாள் நும் இடப்பாகக்திலுள்ள மலைமகளாகிய உமாதேவியாரைச் சினந்து அடருமாயின் அந்தோ துன்பமாய் முடியுமன்றோ?(ஆதலால்) காதலால் நும்மைச் சாரும் தகுதி