பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


12 மின் செய்வான் செஞ்சடையாய் வேதியனே யென் கின்றேற் கென் செய்வான் கொல்லோ வினி. (15) இ-ள். தேவர்கள் (உயர்வறவுயர்ந்த இறைவனது பெருமையை) நி னே ந் து (அவனே வழிபடும் வழி பாட்டில்) ஈடு பட்டிருந்து மிக்க நறுமலர்களால் அருச் சித்துப்போற்றியும் அப்பெருமானது திருவடியினே உள்ளவாறு பொருந்தி மகிழுமாறு அறிந்திலர். (அங்ங்னமாகவும், இறைவனது பெருமையையும் எனது சிறுமையையும்) நினேந்து செயலற்றிருந்து மின்னலொடு விளங்கும் செவ்வ னத்தை யொத்த சிவந்த சடையினையுடையவனே, வேதப்பொருளாய் விளங்குபவனே என (இவ்வாறு சொல்லளவிற்) போற்றியிருக்கும் எளியேற்கு இனி அப்பெரியோன் எங்ங்ணம் அருள் செய்வானே? எ-று வானவர்கள் செய்யும் சிறப்புடைய பூசனைக்கும் எளிவந்தருளாத இறைவன், எளியேனது போற்று தலுக்கு எங்ங்ணம் எளிவந்தருள்வான் என இரங்கிக் கூறியவாறு, இனியே நாம் உய்ந்தோம் இறைவன்தாள் சேர்ந்தோம் இனியோ ரிடரில்லோம் நெஞ்சே - யினியோர் வினைக்கடலே யாக்குவிக்கு மீளாப் பிறவிக் கனேக்கடலை நீந்தினுேங் காண். (16) இ-ள். நெஞ்சமே, இப்பொழுதோ ந ம் இறைவனது திருவடியாகிய புணையினே (தெப்பத் திண்)ச் சேரப்பெற்ருேம். (ஆதலால்)உய்திபெற்ருேம்.