14
எளிமைத் தன்மையுடையவனே. அப்பெருமானைக் கையாரத்தொழுது வணங்கி (அவனருளே கண்ணாகக் கொண்டு) காணவல்ல மெய்யடியார் எல்லார்க்கும் அவனைக் கண்ணாரக் கண்டு மகிழ்தல் இயல்வதேயாம். (அப்பெரியோன்) இ இடையறாத பேரன்பினால் தன்னை வழிபடுவார்க்கு அவர்தம் சிந்தையுள்ளே தோன்றி நின்றருள்புரிவான். எ-று - ‘காண்பார்க்கு’ம் என்புழி, மனத்தால் நினைத்தலும் வாக்கால் வழுத்தலுமே யன்றிக் கண்ணென்னும் பொறியினால் காண முயல்வார்க்கும் என்பது பொருளாதலின் உம்மை இறந்தழீ இய எச்சவும்மை. கைதொழுது காண்பார்க்கும் - கையினால் தொழுது காணவல்லார் எல்லார்க்கும்; காண்பா ரெவர்க்கும் என்ற தொடர் காண்பார்க்கும் எனக் குறைந்து நின்றதாகக்கொள்க. சோதியாய்த் தோன்றுதல், “ஏதுக்க ளாலும் எடுத்தமொழியாலு மிக்குச்சோதிக்க வேண்டா சுடர் விட்டுளன் எங்கள் சோதி” எனவரும் திருப்பாசுரத்தால் விரித்துரைக்கப் பெற்றமையறியக. உலகுக்கு ஆதியாய் நிற்றல் - உலகத்தை ஒடுக்கி மீளத் தோற்றுவித்தற்குரிய நிமித்த காரணன் தானொருவனேயாய் நிற்றல். அரன் - சங்கரித்தலாகிய தொழிலைச் செய்பவன். ‘உலகுக்கு ஆதியாய் நின்ற அரன்’ எனவே, சங்காரகாரணனாய் நின்ற சிவபெருமானே எல்லாவுலகத்தையும் தோற்றி நிலைபெறுத்து ஒடுக்க வல்ல முழுமுதற்கடவுள் என அறிவுறுத் தருளினாராயிற்று.
இனி, இப்பாடலில் காண்பார்க்கு எனவரும் மூன்றினையும் முறையே, குரு, இலிங்கம், சங்கமம் என்ற மூன்றிடத்தும் எனக்கொண்டு, “குருவையே