பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 சிவமாகக் க | ண ப க் கு ம் , இலிங்கத்தைக் கைதொழுது சிவமாகக் காண்பார்க்கும் உலகிற்கு முதற்கடவுளாய் நின்ற அரனே அ ங் க ங் ேக காணலாகும். பத்தரது சிவவேடத்தைக் காதலாற் சிவனெனவே காண் பார்க்கு அவ்விறைவன் அவர் தம் சிந்தையுள்ளே சோதிய ய்த் தோன் றி யருள் வன்’ எனப்பொருள் கொள்வர் சிவக் கவிமணியவர்கள். அரனென்கோ நான்முக னென்கோ வரிய பரனென்கோ பண்புணர மாட்டேன்-முரணழியத் தானவனைப் பாதத் தனி விரலாற் செற்ருனே யானவனே யெம்மானே யின்று. (18) இ-ள்: அரக்களுகிய இராவணனே ம று ப ா டொழியத் தனது திருப்பாதத்தொரு விரலால் அடர்த் தடக்கியவனும் யானேதான் என்னும்படி என்னுேடு உடனுய் நிற்பவனும் எமது தலேவகை விளங்குபவனும் ஆகிய இறைவனே (எல்லா வுலகங்களேயும் அழித்து ஒடுக்குந் தொழிலுடைய திருமேனி கொண்ட நிலை கருதி) அரன் என்ற பெயராற் கூறிப் போற்றுவேனே? (அங்ங்னம் ஒடுங்கிய உலகங்களை மீளவும் படைக்கும் நி ைவுடன் தாமரை மலரில் வீற்றிருக்குந் திருவுரு வுடைமை கருதி) நான்முகன் என்ற பெயராற் போற்று வேனே? (இங்ங்னம் உலகங்களைக் குறித்தகால எல்லே வரை நிலைபெறச் செய்து காக்குந் தொழில் பூண்டு அலேகடல் நடுவிலே அறிதுயிலமர் திருவுருவுடைமை கருதி) அரியென்னும் பெயருடைய பரனென்று போற்று வேனே எ-று. என்றது, படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் அவ்வத்தொழிற்குரிய அயன்,