25
நிலையாதாய் முடியும் என அம்மையார் இறைவன்பால் வைத்த எல்லையற்ற பேரன்பின் திறத்தால் இரங்கியவாறு காண்க. பொறி-நல்வினைப் பேறு. “பொறியின் மையார்க்கும் பழியன்று” என்பது திருக்குறள்.
இவரைப் பொருளுணர மாட்டாதா ரெல்லாம் இவரை யிகழ்வரே கண்டீர் - ‘இவர்’தமது பூக்கோல மேனிப் பொடி பூசி யென்பணிந்த பேய்க் கோலங் கண்டார் பிறர். (29)
29.இ-ள் (அடியார்க்கு எளிவந்தருளும் பெருமானாகிய) இவரை முழுமுதற்பொருள் என்று உணரவல்ல ஞான மிலாதா ரெல்லாம் இவரை யிகழ்ந்துரைத்தல் முறையாகுமோ? (நம்பெருமானாகிய) இவர் செந்தாமரை மலர்போன்று செந்நிற முடையதாய்த் திகழும் தமது திருமேனியிலே வெள்ளிய திருநீற்றினைப் பூசி எலும்பு மாலையை யணிந்தமையால் அஞ்சத்தகுந்த புறக்கோலத்தினையே பிறர் கண்டனர். எ-று
இறைவர் தமக்கு அணியராய்த் தோன்றிய எளிமைத்திறம் விளங்க அம்மையார் இவர் என்னும் அணிமைச் சுட்டினால் மும்முறை சுட்டினார். பொருளுணர மாட்டாதார் - முழுமுதற்பொருள் இவரேயென்று உணரவல்ல அறிவுமதுகை யில்லாதார். இகழ்வதே - இகழ்தல் முறையோ? பூக்கோலமேனி தாமரை மலர்போலும் சிவந்த அழகியதிருமேனி. பேய்க்கோலம் - கண்டர்ர்க்கு அச்சத்தை விளைக்குந் தோற்றம். ‘பிறர் பேய்க்கோலம் கண்டார்’ யானோ அத்திருக்கோலத்திற்கு உள்ளீடாகிய பூக்கோலமேனியின் பொலிவினையே கண்டு அகமகிழ்கின்றேன் என்பது கருத்து.
-