உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

விண்டார்கள் மும்மதிலும் வெந்தீ யினிலழியக்
கண்டாலு முக்கண்ணாங் கண். (84)

இ-ள்: இறைவனுடைய கண்கள், (கொடுவினையைச் செய்து இறைவனோடு) மாறுபட்டவர்களாகிய அவுணர்களுடைய முப்புரங்களும் வெம்மைமிக்க தீயினால் அழிந்தொழியக் கண்டனவாயினும், சுடர்விட்டுப் பொங்கியெரியும் தீயும் குளிர்ச்சி தரும் மதியும் தன்னெதிர்ப்பட்ட பொருள்களிற் பரவும் கடுவெயிலையுடைய ஞாயிறும் ஆகிய முச்சுடர்களைப் போன்று முறையே அழித்தலும் தண்ணருள் செய்தலும் நோய் நீக்கிக் காத்தலும் ஆகிய மூவகை யியல்புகளும் ஒருங்குடைமையால் முக்கண்கள் எனப்போற்றப் பெறுவன வாயின எ-று .

கண் மும்மதிலும் தீயினில் அழியக்கண்டாலும் பொங்கெரியும் தண்மதியும் கடுஞ்சுடரும் போலும் முக் கண்ணாம் என முடிக்க, கடுஞ்சுடர்— கடுங்கதிராகிய சூரியன்.

கண்ணாரக் கண்டுமென் கையாரக் கூப்பியும்
எண்ணார எண்ணத்தால் எண்ணியும் — விண்ணோன்
எரியாடி யென்றென்றும் இன்புறுவன் கொல்லோ
பெரியானைக் காணப் பெறின். (85)

இ-ள்: (பிறவாயாக்கைப்) பெரியோனாகிய இறைவனை (அவனருளாற்புறத்தே) காணப் பெறுவேனாயின் அவனது திருமேனியழகினை என் கண்களால் நிறையப் பருகியும் என் கைகள் குளிரும் வண்ணம் அவன் திருவடிகளைப் பல முறை கைகூப்பி வணங்கியும் அவனது திருவருட் பெருமையினை நெஞ்சார