பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

அவனைப் பகைவர்கள் எதிர்த்து நின்றனர். ஆகவே அவன், முதற்கண் மாசிடோனியாவில் உள் நாட்டுக் கலகக்காரர்களை அடக்கி, வடதிசையில் வாழ்ந்த அநாகரிக மக்களை வென்று, தென் திசையில் தன் ஆட்சியை ஏற்க மறுத்த திப்ஸ் நகரை முற்றிலும் அழித்துத் தன் ஆற்றலை ஓரளவு யவனர்களுக்கு உணர்த்தினான். பல யவன இராச்சியங்களும் அவன் தலைமையை ஏற்று கொண்டு, பாரசீகத்தின் மீது படையெடுத்துச் செல்ல இசைந்து முன் வந்தன.

அந்த நிலையில் அலெக்சாந்தர் ஆசியாவுக்குள் புகுந்து, பழம் பெரும் பாரசீக நாட்டின் மீது படையெடுத்தான். பல இலட்சம் படை வீரர்களைக் கொண்ட பாரசீகத்தின் தரியஸ் மன்னரை எதிர்த்துப் போரிட அவனிடம் முப்பது அல்லது நாற்பதாயிரம் விரர்களே இருந்தார்கள். அவனுடைய படையில் மாசிடோனியக் காலாட்படையே சிறப்பானது. அப்படையிலிருந்தவர்கள் பெரும்பாலும் ஈட்டிகள் போன்ற கருவிகளை எறிந்து போரிடுவதில் வல்லவர்கள். சண்டை, அவர்கள் ஒருவர்பின் ஒருவராகவும், ஒருவர் பக்கம் ஒருவராகவும் நெருங்கி நின்று, நீண்ட சதுரமான, அணியாகச் சென்று எதிரிப் படைகளைத் தாக்கிக் சிதறச் செய்வது வழக்கம். இதற்காக அவர்கள் தனிப் பயிற்சி பெற்றிருந்தனர்.

அலெக்சாந்தர் பாரசீகப் படைகளை, கிரேனிகஸ் நதிக்கரையிலும், பின்னர் இஸ்ஸஸ் பின்ற இடத்திலும் இருமுறை முறியடித்தான். மன்னர் தரியஸ் மட்டும் உயிர் தப்பி ஒளிந்து கொண்டார். அவ-