பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

பின்னர் சீனாப், ராவி ஆகிய ஆறுகளையும் கடந்து சென்றது யவனர் படை. மலை நகரங்களான முப்பத்தெட்டு நகரங்கள் அதன் வசமாயின. மேற்கொண்டு பியாஸ் நதியைத் தாண்ட வேண்டியிருந்தது. அந்த ஆற்றின் கரையிலிருந்தபடியே யவனப் படையினர் தம் தாயகத்திற்குத் திரும்ப விரும்பினர். அங்கிருந்து கிழக்கேயும் தெற்கேயும் இருந்த இராச்சியங்கள் எவை? நாடுகளின் அமைப்புக்கள் எப்படி? என்ற விவரம் எதுவும் அவர்களுக்குத் தெரியாது. அலெக்சாந்தருக்கும், அம்பி முதலிய அரசர்களுக்குமே தெரியவில்லை. அந்த நிலையில் யவன வீரர்கள், தாங்கள் மேலும் செல்ல வேண்டிய இடம் ஒன்றுதான். அது தங்கள் தாய் நாடு என்பதை மன்னன் அலெக்சாந்தருக்குத் தக்க பிரதிநிதிகள் மூலம் தெரிவித்துவிட்டனர். அவனுக்கு அடங்காத சினமுண்டாயிற்று. அவன் குமுறினான்; குதித்தான்; மேலும் வெற்றி வேண்டா; இதுவரை அடைந்த வெற்றிகளை ஒன்று சேர்த்து நிலைநிறுத்திக் கொள்வோம்!' என்று வேண்டினான். அப்பொழுதும் அவன் படை வீரர்கள் தாங்கள் வந்த திசையைப் பார்த்தே திரும்பி நின்றனர். எட்டு ஆண்டுகளாக அவனுடன் கீழ்த்திசை நோக்கி வந்து போரிட்ட அவர்களுக்குப் போரில் ஊக்கமும் உற்சாகமும் இல்லாமற் போனதையும் அவன் உணர்ந்துகொண்டான்.

அலெக்சாந்தரின் இந்தியப் படையெடுப்பு மூன்று ஆண்டுக்காலம் நீடித்திருந்தது. இதில் இந்திய மண்ணில் அவன் தங்கியிருங்த காலம் பத்தொன்பது மாதங்களேயாம். அப்பொழுது அவன்