பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

பொழுது மகதத்தை ஆண்டுவந்த மகாபத்ம நந்தன் வஞ்சனையால் இராச்சியத்தைக் கைப்பற்றிக் கொண்டவன். அவனுடைய தாழ்ந்த குலத்தையும், அவன் இராணியை வசப்படுத்திக் கொண்டு, மகத மன்னர் மகாநந்தியையும், அவர் மைந்தர்களான இரண்டு இளவரசர்களையும் வதைத்து, அரசைக் கைப்பற்றியதையும் மகத மக்கள் வெறுத்து வந்தனர். ஆயினும் அவன் அவர்களைக் கடுமையாக அடக்கி ஆண்டு வந்தான். அவனுக்குப் பின்னர், அவனுடைய மைந்தர்களான நவநந்தர்களில் மூத் தோனான சுகற்பன் அரியணை ஏறினான். அவன்

சந்திரகுப்தரும் சாணக்கியரும்

காலத்தில் தான் சந்திரகுப்தர் நாடுகடந்து வெளியேற நேர்ந்தது. அவர் மகதத்தின் தலைநகரான