பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47

சந்திரகுப்தருக்குப் பல துணைவர்கள் சேர்ந்தார்கள். அவர் பெரிய படையைச் சேர்த்துக்கொண்டு மகத நாட்டிற் புகுந்து, நந்த வமிசத்தினரை அழித்து, பாடலிபுத்திரத்தைக் கைப்பற்றி விட்டார். அவர் மகத மன்னராக முடி சூட்டிக் கொண்டார். நந்தர்கள் சேர்த்துவைத்திருந்த செல்வங்களில் தங்கப் பணமாக மட்டும் 80 கோடி இருந்ததாம். ஒரு பணம் ரூபா 7 வீதம் இது ரூபா 560 கோடியாகும்.

அலெக்சாந்தருக்குப் பின்னர் அவனுடைய பழைய தளபதிகளில் ஒருவனான செலியூகஸ் ஆசியா மைனருக்கும் இந்தியாவுக்கும் இடையிலிருந்த நாடுகளை ஆண்டுவந்தான். தானே ‘உலகின் சக்கரவர்த்தி’ என்று அவன் பட்டம் சூட்டிக் கொண்டிருந்தான். அவனை ‘நிகேடார்’ (வெற்றியாளன்) என்றும் சொல்வதுண்டு. அந்த வீரன் இந்தியாவின் வடபகுதியில் சிந்து நதியைத் தாண்டிப் படையெடுத்து வந்தான். சந்திரகுப்தர், 4,00,000 காலாட் படையினர், 20,000 குதிரை வீரர், 4,000 தேர்கள், 6,000 யானைகள் கொண்ட படையுடன், அவனை எதிர்த்துப் போரிட முன்வந்தார். செலியூகஸிடம் 1,50,000 வீரர்கள் இருந்தனர். தட்ச சீலத்தில் நடைபெற்ற போரில் யவனப் படையினர் கூட்டம் கூட்டமாக வதைக்கப்பட்டனர். சந்திரகுப்தரே வெற்றி பெற்றார்.

செலியூகஸ் அவருடன் சமாதானம் செய்து கொண்டான். தன் ஆட்சியிலிருந்த ஆப்கனிஸ்தானம், பலுசிஸ்தானம் முதலிய நான்கு நாடுகளை அவருக்கு அளித்து விட்டுத் திரும்பிச் செல்ல