பக்கம்:அலைகள்.pdf/155

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கண்ணன் இ 153

ஆனால் அம்மா எங்கேயும் விழல்லையே முழிகிப் போய் முழி பிதுங்கினமாதிரி ஏன் என்னைப் பிடிச்சுக்கறா? இன்னொண்ணும் புரியல்லை. தெருவில் நான் போனால், பெரியவா சின்னவா எல்லாரும் உடனே ஒரு கும்பல் கூடி கிசு கிசுன்னு பேசிச் சிரிச்சுக்கறாளே ஏன்? எங்கேயாவது சொக்காயில் கரி, மை ஏதாவது பட்டுண்டுட்டேனா? தோள் பட்டையைத் திருப்பி திருப்பிப் பார்த்துக் கொள்வான். ஒன்றும் தெரியவில்லை. அம்மா சரியாத்தாளே தோச்சுப் போட்டிருக்கா?

பள்ளிக்கூடத்தில்கூட அவனுக்கு ஒதுக்கு இடம்தான். இதே கிசு கிசுப் பேச்சு, ரகசியச் சிரிப்புத்தான். ஒண்னும் புரியல்லே. முதல்நாள் பள்ளிக்கூடத்திலிருந்து வந்தவுடன், அம்மாவைக் கேட்டான்.

‘ என்னம்மா! என் முதுகிலே கரி ஒட்டிண்டிருக்கா, பாரு; எல்லாரும் சிரிக்கிறாளே?”

அதுக்குள்ளே மாமா குறுக்கிட்டு: “மூஞ்சியிலே நீங்கள் பூசிய கரி உன் முதுகில் தெரியுதடா அதுதான் காr.’ இதென்ன பாஷையோ? அம்மாவுக்குக் கன்னத்தில் கண்ணிர் மாலை மாலையா வழியறது. அம்மா பேசாமல் இருக்கா. அவனை அவள் அப்பொழுது அனைத்துக் கொண்டால் தேவலை, நடுக்கூடத்தில் நடுக்காட்டில், தனியாக நிற்கி றான். ஆனால் அம்மா தன் மூலையை விட்டு நகரவில்லை,

அப்புறம் இன்னொண்ணு. அம்மா நாளாக ஆக அழகா யிண்டே வந்தாள். ஆனால் அது ஒரு விதமான அழகு; அவளைப் பார்த்தால், ஒரு பக்கம் சந்தோஷமாயிருக்கும். மறு பக்கம் பயமாயிருக்கும்; இன்னொரு பக்கம் துக்கமா யிருக்கும். முகம் சுண்ணாம்பாய் வெளுத்துப்போய் மூக்கு, முழி, வாய் எல்லாம் செதுக்கிவிட்டாற்போல், கோவிலில் ஸ்வாமிக்கு இருப்பதுபோல், சுத்தமாய், எடுப்பாயிருக்கும். முகத்தைச்சுற்றி மாலை போட்டாற்போல் அடுக்கடுக்காய் அடர்த்தியாய் மயிர், பேப்பர் கூண்டுக்குள்ளே அகல்விளக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/155&oldid=666883" இருந்து மீள்விக்கப்பட்டது