பக்கம்:அலைகள்.pdf/194

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


192 இ லா. ச. ராமாமிருதம்

‘அப்பா, சாமி இருக்காரா அப்பா?’’

“ஏன் அப்படிக் கேட்கிறாய்?’’

“சாமியிருந்தால் என் அணிலைச் செத்துப்போக விட்டிருப்பாரா?”

நான் குனிகிறேன்.

அவன் விழிகளின் புழுக்கம் என்னென்று புரிகின்றது. குழந்தையின் முதல் துயரத்தில் நம்பிக்கை தன் வேர்கள் கின்று ஆட்டம் கொடுத்துவிட்ட கிடுகிடுப்பு,

‘துரும்பிலு மிருப்பார்னு சொன்னையேப்பா, சொல் லேன்!’’

என்னிடம் பதில் இல்லை.

மொட்டை மாடியில் தென்னை மட்டையில் ஏதோ “கொல்லென்று அலறிற்று.

அந்தப் பிரம்மாண்டமான எத்தனையோ கால் பூச்சி யிடம் அகப்பட்டுக்கொண்ட இரையா? இல்லை, நடுநிசி யில் உலகம் தன் தனிமையைக் கண்டு தானே மிரண்ட வீறலா?

D

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/194&oldid=666960" இருந்து மீள்விக்கப்பட்டது