பக்கம்:அலைகள்.pdf/230

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


228 இ லா. ச. ராமாமிருதம்

சுவர்க் கடியாரத்தின்மேல் கண் பாய்கிறது. நிஜார்ப் பையில் காகிதத் துண்டைத் திணித்துக்கொண்டு வெளியே ஒடுகிறேன்.

இந்த அசரீரி விளிப்பில்தான், இன்று, இத்தனைநாள் தவத்தின் கைகூடலா?

மாலையாகியும் கத்தரி வெய்யில் முதுகைப் பிளக்கிறது. கண்ணும் மூக்கும் செவியும் ஆவி பறக்கின்றன.

நிழலுக்கு ஒரு வேப்பங்கன்றுகூட கிடையாது. ஆனால் எனக்கு நினைவு தெரிந்து, அதற்கு முன்னிருந்துகூட இது வேப்பமர ஸ்டாப் தான்.

பஸ்கள் வருகின்றன. நிற்கின்றன. போகின்றன. யார் யாரோ இறங்குகிறார்கள், ஏறுகிறார்கள், போகிறார்கள்.

நான் நின்று கொண்டேயிருக்கிறேன். பையுள் காகிதத்தை கை நெருடுகின்றது.

இவளாயிருக்குமா?

அவளாயிருக்குமா? இல்லை இவளா?

இவளா??

இவளா???

எவளா?

யாரோ, யாருக்கோ, என்றோ, கையொப்பம்கூட இல்லாது எதற்காகவோ எழுதின மூன்று வரிகளுக்காக, இன்று நான் இங்கு இந்நேரம் எதற்கு, யாருக்காகக் காத்திருக்கிறேன்?

கேள்விகள் புத்தியின் ஜன்னல்கள்.

ஆயினும் ஒரு எணணம்-ஒரே எண்ணம் புத்தியுள் புகுத்து சாளரங்களையும் அடைத்துக் கொண்டுவிட்டால், புத்தியே அவ்வெண்ணத்தைச் சுமக்கும் ஒடாகி விடுகிறது.

ஏமாந்து கொண்டே, ஏமாந்து கொண்டேயிருக் கிறேன் என்பதை உணர்ந்து கொண்டே, அது பற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/230&oldid=667034" இருந்து மீள்விக்கப்பட்டது