பக்கம்:அலைகள்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
22 இ லா. சா. ராமாமிருதம்
 

 வில்லை என் வாயிலிருந்து கத்தல் வரமாட்டேனென்கிறது. மூச்சுத் திணறுகிறது. கையையும் காலையும் உதைத்துக்கொள்கிறேன். என் கண்கள் மூடிக்கொள்கின்றன. ஒரே இருட்டு, நான் எங்கோ படு ஆழத்துக்குப் போகிறேன்...

என்னினைவு என்னிடம் வந்தபோது, என்னை ஒரு கட்டிலில், தோல்வார் போட்டுக் கட்டியிருக்கிறது. என்னைச் சுற்றி நாலைந்துபேர் நிற்கின்றனர். அவர்கள் பார்வையும் கைகளும் பயமாயிருக்கின்றன. கண்ணை மூடித் கொள்கிறேன்.

என் செவியில் மாத்திரம் சில வார்த்தைகள் விழுகின்றன.

“ஆபத்தான கேஸ்... இப்போதைக்கு, கம்பிபோட்ட அறையில், சங்கிலி போட்டுக் கட்டிவையுங்கள்...”


[][][]
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/24&oldid=1123402" இருந்து மீள்விக்கப்பட்டது