பக்கம்:அலைகள்.pdf/247

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அலைகள் இ 245

கொள்கிறாள். பாலு என்னை ஒரு தினுசாய்ப் பார்க்கிறான். எல்லோரும் எங்களைப் பார்க்கிறார்கள்.

அவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அவர்களிடம் அழுகையிருக்கிறது. அதுகூட என்னிடமில்லை.

திடீரென என் கழுத்தின்மேல் பிடி தளர்கின்றது. குழந்தையின் தலை சாய்கின்றது. கனத்தை மெதுவாய் கீழே இறக்கிவிட்டு எழுகிறேன்.

பாம்பைக் கண்டாற்போல், எல்லோரும் எனக்கு வழி விட்டு, ஒரு மூலையாய் ஒதுங்கி என்னையே பார்க்கிறார் கள்,

திண்ணையில் போய் உட்கார்ந்து விடுகிறேன். எல்லோரும் அலைகளே. என்னை அழைத்துப்போக வரும் பேரப் பிள்ளைகளின்

குரல்கள் கேட்கின்றன.


அ.-16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/247&oldid=667064" இருந்து மீள்விக்கப்பட்டது