பக்கம்:அலைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45 O லா. ச.ராமாமிருதம்



காற்று எழும்பி வேப்பங்கிளைகளை ஊடுருவிற்று. பூக்கள் என்மேல் உதிர்ந்தன. தலையிலும், சட்டை மேலும் ஒட்டிக் கொண்டன.

***

ன் நண்பனே! பத்து வருடங்களுக்குமுன் இல்லாத அவசரம் உனக்கு இப்போது ஏன் எங்கிருந்து வந்தது? அப்போது இப்படியா இருந்தாய்? ஸ்டேஷனை நெருங்க, நடை தளர்ந்து மூச்சுத் திணறி முக்கு திக்காடி அசைந்து நின்று அடிவயிற்றிலிருந்து 'உஸ்'ஸென்று பெருமூச்செறிவாய். இப்போதைவிடப் பத்து வருடங்களுக்குமுன் அப்போது எனக்கு அதிக ஆச்சரியமில்லையா? அமைதியான அழகான இவ்விடம் விட்டு நகர உனக்கு மனம் இல்லை; எனக்குத் தெரியும். அப்பாவும் கார்டும் நெருங்கிய நண்பர்கள் பின் குடுமியின் முண்டலில் அப்பா தலைமேல், ஸ்டேஷன் மாஸ்டரின் தலைப்பாகை, பட்சிபோல் தலைக்குச் சம்பந்தமில்லாமல் உட்கார்ந்திருக்கும்.

டிரைவர் பொறுமையிழந்து ஊதலைக் கிளப்பினான். ஆனால் அதைப்பற்றி இருவருக்கும் அக்கறையில்லை. பேசிக் கொண்டேயிருந்தனர். கார்டு வண்டியில் ஏறிக்கொண்ட பின்னரும் அப்பா உரக்கக் கத்தினார்.

“மறந்துவிடாதே. நாளைக் காலைவரைக்கும்தான் பொடியிருக்கிறது. எங்களோடிருந்தால் பரவாயில்லை. பையன் லீவுக்குப் பட்டணத்திலிருந்து வந்திருக்கிறான்-’’

"ஏன் ஸார், உங்கள் பிள்ளைக்குக் காப்பிக்கொட்டை வாங்கி வரவா ரயிலோடுகிறது? விடுமய்யா ரயிலை!"

அப்பா துளிக்கூட முகம் மாறாமல், குரல் வந்த ஜன்னலண்டை போனார்.

“என் பையன் பி.ஏ-க்குப் படிக்கிறான் ஸார், மைக்கல் மஸ்ஸுக்கு வந்திருக்கிறான். எங்கள் குடும்பத்திலேயே இவன் தான் ஸார் முதல் பி.ஏ. நானே பீற்றிக்கொள்கிறேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/48&oldid=1285680" இலிருந்து மீள்விக்கப்பட்டது