பக்கம்:அலைகள்.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
82 இ லா. ச. ராமாமிருதம்
 

 கொள்ளுங்கள். நான் என் அப்பா பெண்'என்று சவாலடித்து விட்டுக் கழுத்தைச் சுளுக்கிக்கொண்டு போனயே, ஞாபகம் இருக்கிறதா!’

“எல்லாம் இருக்கிறது! நம் பேச்சை ஒட்டுக் கேட்டுக் கொண்டு உங்கள் அம்மா "அடே கோதண்டம், புளிய மரத்தில் தொங்கு, என்று தீர்ப்புச் சொன்னாரே, அதுவும் ஞாபகமிருக்கிறது! ஒரு அகமுடையான் பெண்டாட்டி அந்தரங்கம் என்று உங்கள் வீட்டில் உண்டா? மூச்சு விட்டதற்கெல்லாம் கோர்ட்டு, விசாரணை, சாட்சி சம்மன்!-வீட்டுக்கு நாட்டுப் பெண் என்று எனக்கு மரியாதை வேண்டாம்? இழிவேயிருக்கட்டும்; ஆனால் வீட்டுக்கு மூத்த பிள்ளையின் பெண்டாட்டி என்று உங்களைச் சாக்கிட்டு எனக்குச் சேர வேண்டிய மதிப்பு- அதுகூட எனக்குக் கிடையாது! ஏன், வந்த இடத்தில் சும்மாயிருக்க முடியவில்லையா? இங்கே வந்து கூட நாம் திரும்ப முருங்கை மரத்தில் ஏறிக்கொள்ளணுமா?’’

“மறுபடியும் இந்த 'நாம்' என்கிற பிரயோகம் சரியாயில்லை.”

"நாம் இல்லை; நீங்களே தான் என்னைப் பேய் என்று விட்டதால், நீங்கள் சாதுவாகி விடுவீர்களா? சந்தோஷமாயிருக்க வந்த இடத்தில் என்னை அவமானப்படுத்தி, நாளும் கிழமையுமாய் என்னைக் கண்ணீரில் காணுவதில் உமக்கென்ன லாபம், என்ன லாபம்னு கேட்கிறேன்! ஊ...ஊ... கொண்டவனே. தூற்றினால், கூரை தூற்றக் கேட்பானேன் ஏ...ஏ...ஏ.”

“சில பேருக்கு அழுவதில்தான் சந்தோஷம்; சண்டை போடுவதில்தான் சமாதானம். பிறத்தியாரை அடித்துவிடுவார்கள். அடிபட்டவன் வலிக்கிறதே என்று விசிக்கு முன்னர், அடித்த கை சுளுக்கிக்கொண்டதென்று தாம் உருண்டு உருண்டு அழுவார்கள். உலகமும் அவர்கள் பக்கம் தான் பேசும். சில பேர் பிறந்த வீட்டுக்கு வந்ததுமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/84&oldid=1144358" இருந்து மீள்விக்கப்பட்டது