பக்கம்:அலைகள்.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
86. இ. லா. ச. ராமாமிருதம்
 

 தில்லை அதுகள்தான் தொண்டையில் முள் மாட்டிக் கொண்டாற்போல், சிறுகச் சிறுக ஆளை அரிச்சுத் தின்னு-என்னப்பா கையிலே கட்டு? விரலை எங்கே வெட்டிண்டே, எப்படி நசுக்கிண்டே? என்ன ஊமைச் சிரிப்புச் சிரிக்கிறே? கையை மறைக்கப் பார்க்கிறே? நான் பார்க்கக் கூடாத! அதென்ன, அவ்வளவு பரம ரகஸ்யமா? சரி; காட்டாட்டாப் போயேன் எப்படியும் நான் என்ன பண்ணப் போறேன்? உன்பாடு, சித்திபாடு!”

"என்ன சித்தி, உனக்குப் பிரமிப்பாயிருக்கிறதா, ‘இதென்ன முடுக்கிவிட்டாற்போல் பேசிக்கொண்டேயிருக்காளே, சாவி ஒயாதா” என்று? நான் உனக்குத்தான் புதிசு. நானே இப்படித்தான். நான் விமலா, மாமியார்கூட எரிஞ்சு விழுவார்: “இதென்ன சள சளா வளாவளான்னு, கடலைக் காய்ப் பானையுள் கையை விட்டாப் போல்’ என்று. என்னைத் திருத்த எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தாச்சு இன்னும் முயற்சி நடந்து கொண்டு தானிருக்கிறது. நடக்கிறதெல்லாம் நடக்கட்டும்; நான் dont care master' நான் விமலா; ஆனால், இப்போ எனக்கே மூச்சு இரைக்க ஆரம்பித்துவிட்டது. சித்தி, ஒரு முழுங்கு காப்பி கொடுக்கிறாயா? அப்புறமாப் பல் தேய்க்கறேன்."”

விமலா !”

"..........."

'ஏ விமல், துங்கீட்டியா'?

“இல்லை, யோசனை பண்ணிக் கொண்டிருக்கிறேன் "

"என்ன யோசனை?”

"எவ்வளவோ!"

'இஷ்டமில்லாவிடில் சொல்ல வேண்டாம்.'

"நான் சொல்லாமல் நீங்கள் தெரிந்து கொண்டு விட முடியுமா?’’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/88&oldid=1145568" இருந்து மீள்விக்கப்பட்டது