பக்கம்:அலைகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முள் O 87

 'தர்க்கம் பண்ணாமலே நமக்குப் பேச வராதா?’

"இல்லை, அவள் முகத்தில் எப்படிப் பால் வடியறது பார்த்தேளா? பார்க்கப்போனால் எங்கள் இருவருக்கும் ஒரே வயதுதான்.”

“இதென்ன, அஸிகையா?”

"அஸிகை தானோ, அல்லது ஏக்கமோ? எப்படி வேணுமானாலும் சொல்லுங்கள். போன வயது இனிமேல வரப் போறதா?”

“நீ என்ன நூற்றுக் கிழவியாகிவிட்ட மாதிரியல்லவா பேசுகிறாய்? அல்லது என்னை ரேழியில் தூக்கிப் போட்டிருக்கிறதா?”

"அதற்கில்லை; இருந்து இருந்து அப்பா இவளை ஏன் பண்ணிக்கணும்? பண்ணிக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தபின் இதைவிட அவருக்கு நெருக்கமான வயதில் பெண் அகப்படாத நாளா இது?”

‘விமலா முகத்தில் பால் வடிவதால், குழந்தையென்று அர்த்தமில்லை. பெண்கள் ஆண்களை விடச் சுருக்கவே விவகார முதிர்ச்சி அடைந்துவிடுகிறார்கள்.'

"இல்லை, அப்பாவுக்கு இத்தனை நாட்களுக்குப் பிறகு பால்யம் திரும்பினதைச் சொல்வதா?”

விமலா, நியாயமாயிரு, தீர்ப்பளிக்க நீ யார், நான் யார்? முதலில் உன் தகப்பனார் கிழம் இல்லை. அடுத்ததாக ஒரு பெண்ணை வீட்டுக்குக் கூட்டி வந்தால் பால்யம் திரும்பினதால் மாத்திரமல்ல. குடித்தனக்காரர் பெண், 'மாமா, மணி என்ன ஆச்சு?’ என்று கேட்டால், 'உங்களோடு அவளுக்கு என்ன பேச்சு, அந்த மணியை என்னைக் கேட்டுத் தெரிஞ்சுக்கக்கூடாதோ?’ என்று என்னோடு சண்டைக்கு வருகிறாயே, எல்லாவற்றையுமே அந்தக் கண்ணுடன் பார்ப்பதில் அர்த்தமில்லை. நீயே எண்ணிப்பார். இருபது வருஷமாய் உனக்கு, தானே தாயும் தந்தையுமாய் தொட்டி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/89&oldid=1288239" இலிருந்து மீள்விக்கப்பட்டது