பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 ❖ லா. ச. ராமாமிர்தம்

இல்லாத ஈரம் அவளுக்கு ஆகவேயில்லை. உடனே கையைத்
துடைக்காவிடில் ரகளைதான். முதல் சிணுங்கலிலேயே
முகம் ஜ்வாலைத்திட்டு. மற்ற சமயங்களில் செக்கச் செவேல்
அல்லது பளிங்கு?

இந்த வயசில் குழந்தை எப்படிக் கொழகொழன்னு
இருக்கணும். ஏதோ பொம்மை வரைந்தாற்போல் நுட்பமாய்,
மெல்லியதாய் பெரிய வரையலின் சின்ன ஸ்கேல் போல்,
அங்கங்களும் அவயவங்களும் தந்தச் செதுக்கலில், பெரிய
பொம்பளை மாதிரி.

இவள் நிறம்கூடத் தனி ரகம், ஒவியம் அசையறதா
வெச்சுக்குவோம். ஒவ்வொரு அசைவுக்கும் அங்கங்கே
ஊட்டியிருக்கும் வண்ண நயங்கள் “டால்” வீசும் போல்,
அவளிடம் அவள் அறியாமலே ஏதோ ‘ட்ரிக்’ பேசிற்று.
இவளால் நான் கவியாகி விடுவேன் போலிருக்கு. வஸூ
சிரித்தும் கொண்டாள். சில சமயங்களில் தன்னோடு பேசிக்
கொண்டே விளையாடுவதைப் பார்க்க அலுக்கவேயில்லை.

ஆனால் சாப்பிட ரொம்பத்தான் படுத்தினாள். ‘காக்கா’
காட்டி, ‘குருவி’ காட்டி அவளை மசிக்க முடியவில்லை.
அடம் பிடித்து முன் பிடிக்குப் பின் பிடி துணையாக
அவசரமாக ஊட்ட முயன்றால் உடனே குமட்டிற்று.

அவளே சொல்கிறாள்: “ஜான் நல்லா சாப்பிடுவான்.
ஊட்டாமலே சாப்பிடுவான். ஜோ நல்லா சாப்பிடுவான்.
லில்லி நன்னா சாப்பிடும். சாப்பிட அலையும். அவள் மம்மி
E டபுள் G கொடுப்பாள்.”

“உனக்கு?”
“ஐஸே எனக்குப் பிடிக்காது. உவ்வே.”

ஆனால் ஊறுகாய், வத்தல்குழம்பு, ரஸவண்டல்,
கத்திரிக்காய் வதக்கலில், அடி தங்கின மசாலாப் பொடி-