பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



கொலு ❖ 107

குடிச்சாத்தான் காப்பிக்கு ருஜி.”) கூடத்தைச் சுற்றிப் பார்வைவிட்டு “என்ன பாலா கொலு வெக்க ஆரம்பிக்கல்லியா? பொம்மை நீ வேறே கொண்டு வந்திருக்கே முதல் கொலு!”

“நான்தான் கொலு! இன்னிலிருந்து மூணு ராத்திரி!” சிரித்தாள்.

புரியாமல் விழித்தார். அவள் சொன்னது உள்தோய்ந்ததும், புரிந்ததும்-அந்தக் கோவம் உண்மையிலேயே ஆச்சர்யமாயிருந்தது; பயந்துவிட்டாள்.

“Damm--!” காப்பியுடன் தம்ளரைத் தரையில் வீசிய வேகத்தில், அது சுள் சுள்ளாயுடைந்து ஒரு சில் தெறித்து, அவள் நெற்றியில் பட்டு ரத்தம் மளமள

“Oh God!”

அவள் மேல் பாய்ந்து அணைத்துக் கொண்டான். கையில் ரத்தத்தை அடைக்க முயன்றான்.

“என்னைத் தொடாதேங்கோ!” கத்தினாள்.
“Shut up! உன் ஆசாரத்தை உடைப்பில் போடு!”
டாக்டரிடம் போய், நல்ல வேளை ஒன்றும் சிக்கல் இல்லை. ஓர் ஊசி, இரண்டு தையல், மூணு நாளைக்குத் தலையில் கட்டு, அப்புறம் ஒரு வாரத்துக்கு நெற்றியில் ப்ளாஸ்திரியுடன் விட்டது. “பாலா, பாலா, என்னை மன்னிச்சுடு! மன்னிச்சுடு!” தவித்துப் போனார். “இதுவே கண்ணில் பட்டிருந்தால் என் கதி?”

“அதுசரி, அதென்ன அப்படி upset ஆயிட்டேன்? என்னவோ நடக்காதது நடந்துட்ட மாதிரி! இப்படி ஒரு கோவம் உங்களிடம் முதல் தடவை இப்பத்தான் பாக்கறேன். என்ன ஆச்சு உங்களுக்கு?”