பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 ❖ லா. ச. ராமாமிர்தம்

டுன்னு இருந்தோம்னா-ஆனால் மலை வழியா எப்படித்
தான் காலரா வாந்திபேதி பெரியம்மை மாதிரி வந்து சேர்ந்
தாங்களே தெரியவில்லையே. ஊர் நிம்மதியே கெட்டுப்
போச்சே!”

அவன் விழிகள் ஏற்கனவே மேடு, கோவைப் பழமாகச்
சிவந்துவிட்டன. கோபம் தானே முறுக்கேறிக் கொண்டு
விட்டது.

“உனக்கு நல்லவங்களுக்கும் மத்தவங்களுக்கும்
வித்யாசம் தெரியாது. நீ இப்படித்தான் புலம்பிட்டிருப்பே.”

“சத்தே வழிவிடறயா. மருமக அடுப்பண்டே ஒண்டியாத்
திண்டாடிக்கிட்டிருப்பா. இன்னிக்கு அஞ்சு மரக்காப் புழுக்கி
யாவணும்.”

அவனுக்கு கோபம் தலைக்கேறி மண்டை
‘கிர்ர்’ரிட்டது.
அப்புறம் நேர்ந்தவை ஏதோ கனாவில் அழிந்த கோடுகள்
போலத் தெரிந்துமில்லை, தெரியாதுமில்லை. அவள்
அவனைத் தாண்டுகையில் அவள் இடுப்பில் தன் முழங்கை
யால் தன் முழு பலத்துடன் ஒரு இடி இடித்தான்.

“அம்மாடி!” அந்தக் குரல் கேட்டு அத்தேன்னு எதிர்
குரல் கொடுத்துக்கொண்டு உள்ளிருந்து மருமகள் ஒடி
வந்தாள். அத்தை குமுங்கிய பஸ்பமாய் உட்கார்ந்து காலை
நீட்டி, அடுத்து உடம்பையும் நீட்டியவள்தான். பிறகு
அசையவே இல்லை. உஸ் என்று ஒரு மூச்சு அவளிட
மிருந்து கழன்றது. எத்தனை நாள் காத்திருந்த மூச்சோ!
அத்துடன் சரி.

“என்ன மாமா! என்னத்தைச் செய்துட்டிங்க!”
அலறிக் கொண்டே அத்தையண்டை உட்கார்ந்தாள்.
“இன்னிக்கு இத்தோடு நிக்கல்லே மவளே.
இன்னும் ஒண்ணு பாக்கி
நிக்குதே!” கூரையிலிருந்து அரிவாளைப் பிடுங்கிக்கொண்டு
மலையை நோக்கி நடந்தான். அவனைத் தடுப்பார் யாரு