பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூரசம்ஹாரம் * 159

கத்தியும் சபாஷ் சபாஷ்! என்ற வீர கோஷமுமாய் ஒரே ஒட்டம் உடனே இன்னொரு வீரனின் முறை.

யானைத் தலை (மைசூர்தான், சூரன் பின்னால் நின்று கொண்டு, ஒவ்வொரு தலையாய் மாட்டியது)

ஆட்டுத் தலை குதிரைத் தலை மாட்டுத் தலை சிங்க முகம்-ஒவ்வொரு தலையாய்க் கழன்றன. ‘அடியே, இந்த உண்ணாமலை மவன் மூஞ்சியைப் பாத்தியாடி சொரம் அடிக்கிறாப்போல இருக்குதே கண்ணு மூஞ்சியும் செவசெவன்னு!”

ஆனால் அவனுக்கடிக்கும் ஜுரத்தைக் கண்டவர் யார்? அவனுள் கொந்தளிக்கும் கடல் தண்ணிர் எல்லாம் திரண்டு உருண்டு ஒரு பெரும் அலையாகிக் கொண்டிருந்தது. சூரன் உடலிலிருந்து பிரியும் ஒவ்வொரு தலைக்கும், அவ்வலை ஒரு காத உயரம் உயர்ந்தது-சங்கடமும், சந்தோஷமும் சகிக்க முடியவில்லை.

கடைசீத் தலை! அவன் முறை! தன் மாயமெல்லாம் மறைந்து, மயிலும் சேவலுமாய் ஆவதன் முன் சூரன் கடைசி முறையாக, ஸ்வய உருவம் தோன்றும் தலை!

கீழே விழுந்து நமஸ்கரித்து எழுந்தான். கற்பூர ஹாரத்தி! கற்பூர ஜ்வாலையில், பகவான் சார்த்தியிருந்த வைரப் பதக்கங்கள் விட்டுவிட்டு மின்னின. கிரீடங்கள் மின்னின. கையில் பிடித்த வில் மின்னியது. வில்லின் நுனியில் ஆடும் சிறுமணி மின்னியது. அதில் தொடுத்து விட்டிருந்த வேல் மின்னியது.