பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

மெத்தென்று ஒரு முத்தம்

கோமதி ஜன்னலண்டை உட்கார்ந்தபடி, வெளியே மருதாணி மரக்கிளையில் இரண்டு காகங்கள், ஒன்றை யொன்று கொத்திக் கொண்டு சண்டையிடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மாலை மஞ்சள் வெய்யில் அவளுடைய பூனை விழி களில் பட்டு, விழிகள் எரி திரிகள் ஆயின. வெய்யில் இன்னும் சற்று நேரத்தில் முகத்தை விட்டு நகர்ந்ததும், அந்த ‘ஜாலக் மாறிவிடும். மனம், அதற்கு மறுசுபாவமாவே போய்விட்ட இறுக்கம் தளர்ந்து, சற்று லேசாவே தற்போது இருந்தது. வானிலத்தில் மேகங்கள் இங்குமங்குமாய்ப் பல வர்ணங்களில் சிறுசிறு குன்றுகள் கட்டியிருந்தன. அவை களும் இன்னும் சற்றுநேரத்தில் இருட்டின் ஒரே மெழுகல் ஆகிவிடும். அவளை அறியாமலே, இடது கை இடது கன்னத்தைத் தடவிக் கொண்டது.

‘கோமு, டிபன் சாப்பிடவாயேண்டி, ஆறிப் போறது.” அம்மாவின் குரல் அசக்தமாய் கீழிருந்து எட்டிற்று. இது நாலாந் தடவை. மெனக்கெட்டு மாடி அடிக்கு வந்தே கூப்பிடறா. இப்படிப் புலம்பிப் புலம்பி, “எக்கேடு கெட்டுப் போங்கோடி, உங்களோட மல்லாட முடியல்லே. அவளை அட்ரெஸ்ஸ்ே காணோம். இவள் என்னடான்னா