பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 : லா. ச. ராமாமிர்தம்

உடுப்புக் கூடக் களையாமல் நேரே படுக்கையில் விழுந்தவன் தான்

மஞ்சள்காமாலை. மஞ்சள்காமாலை என்றால், படுக்கை மஞ்சள், தலை யனை மஞ்சள், உடுத்திய ஆடை மஞ்சள், கண் மஞ்சள், கால் கட்டைவிரல் வரையிலிருந்து தலை மயிர்க்கால் வரை மஞ்சள், பார்வை எல்லாமே மஞ்சள் குளிப்பாட்டு. குரலே மாறிவிட்டது. எந்த நிமிடம், பீங்கான் சில்லாய்ச் சுக்கலாகி விடுமோ? களைப்பா? அம்மாடி, அது போன்ற சோர்வை நான் பிறரிடம் கூடக் கண்டதில்லை. நினைப்பும் மூச்சும் இழையோடுவது எனக்கே தெரிகிறது. விழிக்க முடியா இமைகளுக்கடியில், ஸன்னமான பார்வைக் கீற்றில், கவலை தோய்ந்த முகங்கள் தெரிந்து மங்கின. தண்ணிரின் அடியிலிருந்து வருவன போல் விசும்பல்கள்.

‘அம்மா, உடம்பில் நீர் வெச்சுடுத்தே, பார்த்தேளா?” “நம் கையில் என்னம்மா இருக்கு? அவளிடம் சரணா கதியைத் தவிர நமக்கு என்ன தெரியும், நம்மால் என்ன முடியும்? அவள் கைவிட மாட்டாள், அவள் என்ன சத்தியம் மறந்தவளா?” அம்மா பாடுகிறாள். இந்த வயசிலும் குழல் போன்ற குரல்.

பெற்ற வயிறின் மஹிமை. அகமுடையாளின் விரத பலம். குழந்தைகளின் பாசம்-வேளை அறவில்லை. எல்லாம் சேர்ந்து முதலை வாயிலிருந்து மீண்டேன். மறுபிறவி. மீள மூணு மாசம். தேற ஆறு மாசம். தனியார் நிறுவன மாயிருந்ததால், முதலாளிக்கு இரக்க மனசு இருந்ததால்