பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேஸ் முற்றிப் போய்விட்டது. அவளுக்கு வேலைக்கு ஒழுங்காய் வரவே முடியவில்லை. என் மனைவிக்கு அவள் வேலை தடைபடுகிறது. அவரவர்க்கு அவரவர் கஷ்டம். ஆம், ஏழைகளுக்கு இம்மாதிரி ராஜ வியாதி ஏன் வருகிறது? அவளுக்கு எவ்வளவு உதவி செய்யும் நிலையில் நானிருக் கிறேன்? பார்க்கப் போனால் நாம் எல்லோரும் உதட்டால் அனுதாபப்படுவதோடு சரிதானே? ஆஷாட பூதிகள்’. ஆனால் எப்படியும் மனம் தத்தளிக்கிறது. இது குற்ற உனாவு.

2k :k :k

ராமாமிருதம். என் பெயரில் மூன்று தலைமுறைகள் வாஸ்ம் வீசுகின்றன. அமிர்தம் அய்யர் இந்தக் குடும்பத்தின் ஸ்தாபகர் என்பதைத் தவிர அவரைப் பற்றி வேறு தகவல் தெரியாது. முன்னூறு முன்னுற்று ஐம்பது வருடங்கள் ஆகியிருக்குமா?

ராமஸ்வாமி அய்யர். என் பாட்டனார். லால்குடி போர்டு ஸ்கூல் தமிழ்ப் பண்டிதர்.

இவ்விருவருக்குமிடையே எத்தனை அமிர்தமய்யர்கள், ராமஸ்வாமிகள் நிகழ்ந்தனரோ?

என் பெற்றோர்கள் ராமேஸ்வர தரிசனம் பண்ணி நான் பிறந்த அருமை வேறு.

k ::

தாத்தா வரகவி. அவருக்கு பதினைந்து, பதினாறு வயதில், பிள்ளையார் அவர் வாயில் கற்கண்டு போட்ட தாய்க் கனாக் கண்டாராம். மறுநாள் காலையிலிருந்து கவிதையாகக் கொட்ட ஆரம்பித்து விட்டதாம். அவர் பாட்டுக்களைப் படித்திருக்கிறேன். அச்சு வெட்கும் முத்து