பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 ❖ லா. ச. ராமாமிர்தம்

“Ok don't worry, we will manage. எனக்கு வேலை தவறி
சாப்பாடு ஆகாது. UlCer. சரியா பத்து மணிக்கு ஒக்காந்துடு
வேன். இரவு 71/2. அப்புறம் உன் பேர் என்ன-YeS. பத்மா!
கடை கண்ணி, மார்க்கெட் வெளிவேலை எல்லாம் நீதான்
பார்த்துக்கணும். நான் நடைக்கு லாயக்கில்லை. கால் weak
ஆயிடுத்து. இன்னும் ஆயிண்டே இருக்கு. இது ஏதோ தனிக்
கோளாறு. But no more doctoring. தீர்மானிச்சுட்டேன். சரி
போகட்டும். சமையலில் புளி காரம் nil, பயத்தம்பருப்பு
கூடச்சேர். தக்காளி மறக்காதே. வாழையிலை வாங்கு, the
only luxury I allow myself.நீ உன் சமையலைத் தனியாக
சமைச்சுக்கோ. உனக்கு என் சமையலைச் சாப்பிட
வழங்காது. இந்தா பையனுக்கு சாக்லேட் வாங்கிக் கொடு-
ஏண்டா நீ அப்பா கோண்டா, அம்மா கோண்டா? Okay
that is all.”

இப்படித்தான் ஆரம்பித்தது அவள் உத்யோகம்.

அவள் வருவதற்குள் ஸ்னானம் பண்ணி கட்டுக்
கட்டாய் விபூதியிட்டுக் கொண்டு சாய்வு நாற்காலியில் வீற்
றிருப்பார். அவள் காப்பி காத்திருக்கும். கலந்து சுடவைத்துக்
கொள்ள வேண்டும். A 1. வந்தவளை ‘வா’வென்று ஒரு
வார்த்தை. ஒரு புன்னகை. அவள் வந்ததை அடையாளம்
கண்டு கொண்டதற்கு ஒரு தலையசைப்பு. சைகை-ஊஹூம்.

பளீரென வெள்ளை வேட்டி. முழங்கை பனியன்.
தானே தோய்த்துக் கொள்வார் போல இருக்கு. அதிகப்படி
சம்பளத்துக்கு அவளிடம் தோய்க்கப் போட்டால், முதலில்,
மாட்டாள். தோய்த்தாலும் இந்த வெளுப்பு வராது.

பொதுவாகவே பெரிய உத்யோகம் பார்த்தவர்கள்,
பார்த்துக் கொண்டிருப்பவர்கள்-அவள் அப்பாவும் அவர்
களில் ஒருவர்தான்-நடை உடை பாவனைகளில் ஒரு
ஒழுங்குபாடும் அணுகாத்தன்மையும் ஒரு அம்சமாகக்