பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஸ்ருதி பேதம் ❖ 83


கவனிச்சிருக்கேன். செயற்கையாக ஆரம்பித்து அதுவே
பழக்கத்தில் படிந்துவிடும் போலும்.

ஒல்லியான உருவத்தில் விறைப்பாய் நிமிர்ந்த முதுகு.
முன் மண்டையும் உச்சியும் வழுக்கையில் பளபளக்க,
பின்னால் பிடரி வரையிலும் பக்கவாட்டிலும் தும்பை
அடர்ந்து ஒழுங்காய்ச் சீவப் பெற்று அதுவே முகத்துக்கு
ஒரு தனி அழகையும் கம்பீரத்தையும் தந்தது. இப்பவே
இத்தனைச் செவக்க மேனி உற்ற வயதில் எப்படியிருந்
திருக்கும்! வயது ஏற ஏற சிலருக்குத்தான் இந்த உள்தன்மை
யின் ஒளி.

இந்தத் தோற்றத்தை ஒற்றினாற் போல் அவள்
கணவனைப்பற்றி நினைப்பு எழாமல் இருக்குமா? நினைத்
தாலே கைக் காரியம் தடைப்பட்டு, கை அந்தரத்தில் நின்றது.
மாதத்தில் இருபது நாள் Camp. மிச்சம் பத்து நாட்கள்
சிதறுண்டு இருந்தாலும், மனிதன் வீட்டில் இருப்பதைவிட
வெளியில் இருப்பதே மேல். இனி என்றுமே அவனுடன்
புழக்கத்துக்குப் பழக்கப்பட முடியாது. ஆனால் நானாக
என் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டது
தானே! கண்ணை ஒரேயடியாக மறைச்சு விட்டதால் விதி
யென்று ஒன்று இருக்கிறது என்று நம்பத்தான் வேண்டி
யிருக்கிறது. நடப்பது நடந்தே தீரும். வாழ்க்கையின் போக்கில்
ஒரு தவிர்க்க முடியாத தர்க்கரீதி இயங்குகிறது. அதன்
காரண காரியங்களை இங்கேயே இப்பவே தேடினால்
கிடைப்பதில்லை. எங்கோ, எப்பவோ எதனோடோ முடிச்சுப்
போட்டுக் கொண்டிருக்கிறது. இதனாலேயே முற்பிறவி
உண்டென்றும் நம்பும் படியுமிருக்கிறது.

கிட்டப் பழகி சாயம் வெளுத்துப் போயும் ஒரு குழந்தை
யையும் பெற்றுவிட்டேன். இவன் வாய்க்காவிட்டால் என்
திசை எப்படியோ திரும்பியிருக்கும்.