பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 ❖ லா. ச. ராமாமிர்தம்

காலை ஒன்பது மணிவாக்கில் அப்பா, அம்மா, பாப்பா
மூவரும் பைக்கில் ஏறிக்கொண்டு போவது ஜன்னல் வழி
தெரிகிறது. எங்கே போகிறார்கள்? அவரவர் வேலை
பார்க்கிற இடத்துக்குத்தான். குழந்தை? அதுக்குள்ளேயும்
பள்ளிக்கூடமா? இப்ப என்னதான் அக்ரமம் நடக்கல்லே?
ரெண்டுபேரும் வேலைக்குப் போறவாளுக்கு செளகர்யமா
க்ரச்! இல்லை ‘க்ரீச்சா?’-குழந்தைகளை ஒரு இடத்தில்
அடைக்கப்போட்டுப் பார்த்துக் கொள்ளும் இடம் இருக்கே!
காசைக் கொடுத்தால் இந்த நாள் என்னதான் கிடைக்கல்லே!
ஆமா, நான் கூட ஒண்னு அப்படி ஆரம்பிக்கலாமே!
வஸூக்குத் திடீரென்று தோன்றிற்று. எனக்கு காசு
வேண்டாம். கச்சிதமாய் ரெண்டு அல்லது முனு குழந்தை
கள், அதற்கு மேல் இந்த வீட்டில் இட வசதி கிடையாது.

-அது கூடாது. ஒரு குழந்தைதான் வேனும் என் பாசம்
பத்து குழந்தைகளுக்குப் பங்காக முடியாது, கூடாது. ஒரு
குழந்தை, அதன் மேல் குடமாக் கொட்டணும், அம்பாளுக்
குப் பால் அபிஷேகம் பண்ற மாதிரி. அதுவும் பெண்
குழந்தையாத்தான் இருக்கணும். அம்பாளே குழந்தையா,
பாப்பூ மாதிரி. எனக்கும் அம்பாள் கிடைக்க மாட்டாளா?
அவளுடைய தூய்மையில் எப்பவுமே அவள் கண்டெடுத்த
குழந்தையாய்த்தான் இருக்க முடியும். ‘பொன்னிமயச்
சாரலிலே பூத்தமலர் மேடையிலே மன்னு சங்கினுள்ளே’
கண்டெடுத்த குழந்தையாக ஒரு ஸ்தல புராணம் சொல்கிறது.
அவளை ஒரு ரிஷி எடுத்து வளர்த்தாராம். எனக்குத்தான்
கொடுத்து வெக்கல்லே. கிடைக்கவாவது மாட்டாளா?
அம்மா தாங்க முடியல்லியே!

தலையணையில் முகம் புதைந்தது. அடக்க முயன்ற
விக்கல்களும் தேம்பல்களும் அவளை உலுக்கின.

என் நிலைமைக்கு யாரும் ஒண்ணும் பண்ண முடியாது.