பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 ❖ லா. ச. ராமாமிர்தம்

உங்கள் ஏமாற்றம் உங்கள் முகத்திலேயே தெரிஞ்சு, இந்த
வரன் கூடாமல் போயிடுமோன்னு என் வீட்டில் பயந்து
போனா, பெருமாள் புண்ணியம், பெரியவாள் பேச்சைத்
தட்டாமல் நம் கல்யாணம் நடந்துடுத்து. அதுக்கே தனியா
கோவில்லே அங்க ப்ரதஷணம் பண்ணினேன்.”

“வஸூ, வ்யாஸே ப்ரமாதமாய்ப் பாடுவான். குரல்
கல்கண்டு. வ்யாஸ், நீ பாடிக் காண்பிக்கணும். எப்போ
பாடினாலும் நாங்கள் ரெடி எப்படியும் நான் ரெடி கேட்டு
எத்தனை நாளாச்சு! இப்பவே ப்ளிஸ், ப்ளீஸ்.”

“பாட்டும் சிரிப்பும் என்னிடமிருந்து ஒடிப் போயாச்சு.”

ஸ்வேதாவின் உற்சாகம் உள்ளுக்கு வாங்கிற்று. “ஐ ஆம்
ஸாரி, வ்யாஸ்.”

“என் பேரே எனக்கு இப்போ விஷமாயிருக்கு. நான்
கருகிப் போயிட்டேன்.”

“ஆமாம் வ்யாஸ், உனக்கு என்னமோ நடந்திருக்கு,
என்னது அது?”

“ஜோதி.”

இருவரும் காத்திருந்தனர். ஆனால் அதற்கு மேல்
வரவில்லை.

ஸ்வேதா, சன்னமாய் “ஜோதி?”

விருந்தாளியின் விழிகள் நிறைந்தன.

“இறந்து போனாளா?”

“இல்லை, விட்டுட்டுப் போயிட்டா.”

வஸூ ஸ்வேதா இருவரும் வாயடைத்துப் போயினர்.
என்ன பதில் சொல்ல முடியும்? எதைச் சொன்னாலும்
அனுதாபம் ஆகாது சரியாயிருக்காது. அவள் செத்துப்