பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

அலை தந்த ஆறுதல்

கொண்டு எவ்வித ஆரவாரமுமில்லாமல் தன் இருப்பிடத் திற்குச் சென்றமர்ந்தாள். மணி காலை 10-15 ஆயிற்று. ஆபோகிராகக் கீர்த்தனையை முணுமுணுத்துக் கொண்டு உதவி மேலாளர் மேகநாதன் தன் சிட்'டிற்குப் போய்க் கொண்டிருந்தார். அந்தக் கம்பெனி முதலாளியின் மாப்பிள்ளை என்ற மிடுக்கும் இருந்தது. “மிஸ்டர் மேகநாதன்!” என்றாள் நிர்மலா. “யெஸ்! இதோ கையெழுத்துப் போட்டு வருகிறேன்!” என்றார் மேகநாதன். “அது விஷயமாகத் தான்’ என்று அழைத்து “அரை நாள் கேஷீவல் லீவு கொடுத்து விடுங்கள்! மற்றவர்களைக் கண்காணிக்கும் நீங்களே தாமதமாக வந்தால் எப்படி?” என்று கன்னத்தில் அறைந்தாற்போல் சொல்லிவிட்டாள். “இது என் கம்பெனி! நான் எப்படி வேண்டுமானாலும் இருப்பேன். இங்கு என் ஒவ்வொரு வார்த்தையும் சட்டம். வீணாகத் தலைக்குக் கொள்ளி விலைக்கு வாங்காதே” என்று சிறினார் மேகநாதன். ‘அது உங்கள் வீட்டில்! நீங்கள் நிர்வாக மேலாளரின் கோவார்டினேட் அவரை மீறிப் பேசியதற்காக உங்களைத் தற்காலிக வேலை நீக்கம் செய்துள்ளேன். ஐ யாம் கர்ட்டியஸ்; பட் அட் தி சேம் டைம் ஃபேர்ம் (I am courteous but at the same time firm) என்று சொல்லி விட்டுத் தன் வேலைகளைப் பார்க்கத் தொடங்கினாள்.

‘எக்ஸ்ப்ளோசிவ்ஸ் எலக்ட்ரிக் கெமிஸ்ட் ஒருவர் ஒரு அப்ளிகேஷன் எழுதிக்கொண்டு அதை ஃபார்வட்’ (forward) செய்யும்படியாக மிடுக்குடன் கேட்டார். தன்னை விட்டால் அந்த செக்ஷன் பார்க்க ஆள் இல்லை என்ற இறுமாப்பு. அவரிடம் இருந்தது. “அப்ளிகேஷன் ஃபார்வர்டு செய்யப்பட்டது. ஆனால் எக்ஸ்ப்ளோசிவ் செக் ஷனில் பணிபுரியும் இவருக்குச் சிந்தனை வேறிடத்தில் செல்லுமாதலால் அவர் உடன் பணிநீக்கம் செய்யப்