பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

அலை தந்த ஆறுதல்


செவப் :

மணி :

செவப் :

மணி :

அலை தந்த ஆறுதல்

o காட்சி-3

செவப்பாயியின் வீடு...காலை 6 மணி...

(பெருக்கிக் கொண்டே பாடுகிறாள்) தலைவாரிப் பூச்சூட்டி உன்னைப்...பாடசாலைக்கு போவென்று சொன்னாள் உன் அன்னை...மலைவாழை பல்லவோ கல்வி... கடிகாரம் ஒடுமுன் ஒடு.

(மணிமேகலை வருகிறாள்)

என்ன செவப்பாயி...பாட்டும் கூத்தும் சோக்கா இருக்குதே...

இருக்காதா பின்னே!... நாம் படிக்கறத பாத்து எம்மவன் கருக்கல்லயே எந்திரிச்சு கம்மாய்க்கு குளிக்க போயிட்டான்...அத்தோட அவங்கப்பாரு படிச்சு என்னடா செய்யப் போறேன்னு பொலம்பி கிட்டேயிருந்தவரு.சவுளி கடை மளிய கடைல போயி குந்துடான்னு சொன்னவரு-படிடான்னு சொல்லுறாரே...

எல்லாம் ஒன்னோட சாமார்த்தியத்தான். இத்தினி பேருல நீதான் வெரசா படிக்க கத்து கிடடே...

செவப் நீ புருசனை திருத்த கத்து கிட்டியே.

மணி :

அது சரி...நீயா எப்படி சேத்து படிக்கறே?

செவப் கா வை எடுத்துக்க, அக்கா, காகா வருதா

பொறவு தேங்கா மாங்கா.அப்படி பளகனும்"