பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 அலை தந்த ஆறுதல்

யையும் ஏன்? இன்னும் எத்தனை ‘மை’ கள் உண்டோ அத்தனையையும் பார்த்துத்தான் தொலைபேசிக்குரல் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள் என்று பொருள்.

நீர்நிலைக்கு மேலே மிதக்கின்ற பனிக்கட்டி, நீர் நிலைக்குக் கீழே அதிக ஆழம் அமிழ்ந்திருக்கும் அதுபோல மேடை மென்குரலோன் அச்சாணி அன்னதோர் சொல் முத்துதிர்த்தார் என்றால் அஃது கேட்பவர்களின் மனதாழம் வரை சென்று மீளும் மீனெறி தூண்டில் போன்றது.

குறள் பேச்சு குரல் கொடுக்கும் நாள், ஒர் ஞாயிற்றுக் கிழமை! ஆம் உலகின் பெரும்பான்மையான மக்கள் வெள்ளத்தை ஒய்வு நாள் என்ற கயிற்றால் ஒருமைப் படுத்தும் நாள் அதுதானே. நேரம்...இராகுகாலம் விடை பெற்றுக்கொண்டு கோடு கூடு மதியத்தைக் கூவியழைத் திடும் நேரம்...ஞாயிற்றுக் கிழமை இவருக்குப் பேச்சு இருந்தால் என்ன. இல்லாவிட்டால் என்ன, இவருடைய இணை நலம், ஆம்! மனைவியை அவர் அப்படித்தான் அழைப்பார்! வானத்து விண்மீன் தொலைவு உறவினர் வீடுகளுக்கு மகிழுந்தில் சென்றுவிடுவார், மகளுக்குப் பாதுகாவலன் தேரும் நோக்கால்...பிள்ளைகளுக்கும் இவருக்கும் உளவியல் இடைவெளி குறைவு. ஆனால் இயற்பியல் இடைவெளி மிகுதி! வேறுவேறு துறையில் கற்று வரவு செலவில் ஒருவழிப் பாதையுடையவர்கள். மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் என்று வாயாரச் சொன்ன தெய்வ ஆண்டாள் பெயர் தாங்கிய உடன்பிறந்தவள். புக்ககம் செல்லத் தங்களால் இயன்ற அணிலுதவியைச் செய்யவேண்டும் என்ற நினைப்பு இல்லாதவர்கள்.ஆனால் மைத்துன மைத்துணியர்களின் நலத்தில் முறையான அப்பழுக்கற்ற அக்கறை காட்டும்