பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா.

93


தான்! நடந்ததைக் கேள்விப்பட்ட செங்கணான் தம் வாயால் அந்தக் குறளைச் சொல்லுகிறான்.

செங் “மயிர்ப்ேகின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்’

கணைக்கால் இரும்பொறை மானத்தின் இலக்கியம் இல்லை; இலக்கணம்தான்!

(இசை) பின் : இல்வாழ்க்கைக்குத் தேவையானது முதலில் மனைவி! அடுத்தது மானம்! மூன்றாவது வரவுக்கு ஏற்ற செலவு! என்னதான் அபரிமிதமான வருவாய் வந்தபோதிலும், அதற்கேற்பச் செலவுசெய்து வாழ்க்கையைச் செப்பனிட மறந்தால்

அச்சாணி முறிந்து அடியோடு குடைசாய நேரிடும்: ஏதோ சிறுகச் சிறுக ஆகும் செலவை நோக்கி, இது தானே இதுதானே என்று நாம் ஏனோ தானோ என்றிருந்துவிடக்கூடாது. அதுவே சுமையாகி நம் வாழ்வின் அச்சாணியை முறித்துவிடும். குறளாசானும் இதனை மெல்லிதான ஒரு கருத்தில் இழையோட்டிக் காட்டுகிறார். மயிலிறகு போன்ற அழகை வைத்து அங்கே ஆபத்தையும் காட்டுகிறார்.

பெண் : “பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்

சாலமிகுத்துப் பெயின்’ m மயிற்பீலியை அது பொறுக்கும் அளவின்றி மிகுதி யாக ஏற்றினால் அம்மயிற்பீலி ஏற்றிய சகடமும் அச்சும் முறியும்.

(இசை)