தருக்கவிளக்கம். (இ-ள்) காரியம் முன்னின்மைக்கு எதிர்மறை. (எ - று.) காரியம். (எ - து.) காரியத்தினிலக்கணங்கூறுகின்றது. சங. முதலே சார்பே மொழியு நிமித்த மேதிவை மூன்று மெனப்படு மவற்று ளதுவது வாவ தாமுதற் காரணங் காரியத் துடனாக் காரணத் துடனாப் பேரார் பொருளிற் பிறிவற நின்றாங் கேது வாவ தெணிற்சார் பேது நிகழ்த்திரண் டலது நிமித்த மென்ப. (இ - ள்.) அக்காரணம் சமவாயி, அசமவாயி, நிமித்தம் என் னும் வேறுபாட்டால் மூவகைத்து. எதன்கண் ஒற்றித்துக் காரியம் தோன்றும் அது சமவாயிகாரணம்: அஃதெங்ஙனம், நூல்கள் ஆடை க்குச் சமவாயிகாரணம். ஆடையும் தன்னையடைந்த உருவமுதலிய வற்றிற்குச் சமவாயிகாரணம், காரியத்துடனாகத்தான் காரணத்து டனாகத்தான் ஒருபொருளிற் சமவேதித்துக் காரணமாயிருப்பது அச மவாயிகாரணம்: அஃதெங்ஙனம், நூலியைபு ஆடைக்கு, நூலுரு வம் ஆடையுருவிற்கு, அசமவாயிகாரணம். அவ்விரண்டின் வேறாய காரணம் நிமித்தகாரரணம் : அஃதெங்ஙனம், ஆடைக்கு நாடா வேமா முதலியன . இங்ஙனங் கூறிய மூவகைக்காரணத்துள் யாது சிறந்த காரணம் அதுவேகரணம். (எ - று.)
- சமவேதித்து, சமவாய சம்பந்தத்தான் இருந்து, நீக்கமின்றி
நின்று, ஒற்றித்து என்பன ஒருபொருட்கிளவி. முதற்காரணம் ஒழிந்தவற்றுள், கருத்தா கிமித்தகாரணம், எனையதுணைக்காரணம் என்பதமிழ் நூலாசிரியர்,