தருக்கவிளக்கம். ருரு றது. அக்காரணம். எ - து. காரணத்தைப் பகுக்கின்றது. எதன்கண்.எ - து. சமவாயிகாரணத்தினிலக்கணங் கூறுகின் காரியத்துடன்.எ- து. அசமவாயிக்காரணத்தினிலக்கணங் கூறுகின்றது. நூலியைபு. எ - து. 'காரியத்துடன்' என்பதற்கு உதாரணங் கூறுகின்றது. தன் காரியமாகிய ஆடையோடும் ஒரு நூலின்கட் சம வேதித்திருத்தலான், நூலியைபு ஆடைக்கு அசமவாயிகாரணமென் றவாறு. ஈண்டுத்தன், இயைபின்மேற்று, முன்னர் வருவது உரு வின்மேற்று. > நூலுருவம்.எ-து. 'காரணத்துடன்' என்பதற்கு உதாரணங் கூறுகின்றது. நன்காரியத்தின் சமவாயிகாரணமாகிய ஆடையுடன் ஒருநூலின்கட் சமவேதித்திருத்தலான், நூலுருவம் ஆடையுரு விற்கு அசமவாயிகாரணமென்றவாறு. அவ்விரண்டின்.எ - து. நிமித்தகாரணத்தினிலக்கணங் கூறு கின்றது. சமவாயிகாரணம், அசமவாயிகாரணமாகிய இரண்டின் வேறாகிய காரணமென்றவாறு. எ இங்ஙனங் கூறிய.எ - து.கரணத்தினிலக்கணம் முடிந்தது முடித்தலென்னுமுத்தியாற் கூறுகின்றது. பிரத்தியக்ஷப்பிரமாணம். சச. காட்சி யுணர்வின் கருவி காண்டல் புகலுங் காட்சி பொறியோர் புலனை மருவு மியைபான் மன்று முணர்வே
பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/57
Appearance