உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தருக்கவிளக்கம். வுகூ குடமுதலியன. புறப்பொருண்மையான் வரைந்துகொள்ளப்படும் என்றது உருவமுதலியவற்றின்கண் அதிவியாத்தி வாராமற்பொ ருட்டு. வாயுவைக் காட்சிப்பொருள் என்றது காட்சியானுணரப் படும் பரிசத்திற்குப் பற்றுக்கோடாகலின் என்பது. ஏனையிரண் டன்கண் பாவத்தன்மைபை உபாதி என்றது ஏதுவிற்கிடனாகிய அழிவுபாட்டபாவமுன்னபாவங்களின்கண் பாலத்தன்மை வியாபி யாமையான் என்க. பாவம்-உண்மை. அஃதாவது உளதாதற்றன்மை. காஅ.தன்னாற் றுணியப் படும்பொரு டன்னி னின்மை மற்றோ ரளவையி னானே துணியப் படினது சொலுமறுப் புடைய தெனப்படு மேது வென்னு நூலே. (இ-ள்.) தன்னாற் சாதிக்கப்படும் பொருளினதபாவம் மற்றோ ரளவையாற்றுணியப்படின் அது பாதிதமென்னும் ஏதுப்போலி அது நெருப்புச்சூடில்லது, திரவியமாதலின்' எனவரும். ஈண்டுச் சூடின்மை சாத்தியம்.அதனபாவமாகிய சூடு துவக்கித் திரியக்காட் சியான் அறியப்படுதலின் இது பாதிதமாயிற்று. அனுமானம் உரைக்கப்பட்டது.எ று. தன்னால்,எ -து. பாதிதத்தினிலக்கணங்கூறுகின்றது. அநைகாந்திகம், விருத்தம், சற்பிரதிபக்கம், அசித்தம், பாதி தமென்பவற்றைப் பிறழ்ச்சியுடையது, மாறுகொள்வது, மறுதலை யுடையது, பேறில்லது, மறுப்புடையது என மொழிபெயர்த்துக் கொள்க. இவற்றுள், பாதிதம் கொள்ளற்பாலதன் அபாவத்தை நிச்ச யித்தலானும், சற்பிரதிபக்கம் மறுதலைப்பொருளுணர்விற்குக் கரு