பக்கம்:அழகர் கோயில்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

91 அழகர்கோயில் தப்பட்ட இளத்தைச் சார்ந்த தாதர், கொண்டிக்காரர் (Assistant) எனப்படுவார். மாட்டோடு பறை தட்டிக்கொண்டு வரும் பறையர் அல்லது சக்கிலியர் தப்புக்காரர் எனப்படுவார். இன்று இவ்வமைப்பு முறை சிதைந்துவிட்டது; அடியார்கள் சமயத்தார் துணையின்றியே கோயிலுக்குச் சென்றுவிடுகின்றனர். சித்திரைத் திருவிழாவுக்குப் பத்து நாட்களுக்கு முன்னர், இவர் வீட்டில் நடைபெறும் கம்பசேவை என்னும் பூசையின்போது, திரு மாலடியார் சாதி வேறுபாடின்றி உண்பது வழக்கம். இப்பூசை இன்றளவும் நடந்து வருகிறது. மேற்கூறிய நல்லான் தாதன் மரபில் தற்போதுள்ள முத்தழகுக் கோடாங்கி தான் பதினெட்டாவது தலைமுறை எனக் கூறுகிறார்18. சித்திரைப் பௌர்ணமியன்று இரவில் ஆண்டார் வண்டியூரில் காரைச்சேரி சமயத்தார் அமைத்துத்தரும் கொட்டகையில் தங்கும் போது மேலமடைச் சமயத்தார், ஆண்டாருக்கு ஒருபானைத் தயிர் கொண்டுவந்து தருவார். வேறு பணி இவர்க்கில்லை, 16 கட்டனூர்ச் சமயத்தார் ஆட்சிக்குக் கிழக்கெல்லையாகப் பார்த் திபனூருக்கு வடக்கேயுள்ள அன்னவாசல் மிளகனூரும் மேற்கெல்லை யாகத் திருப்புவனத்துக்குத் தெற்கேயுள்ள அச்சங்குளம், பையனூரும், தெற்கெல்லையாக வீரசோழம், இருஞ்சிறை, அத்திகுளம், நாலுரும். வடக்கெல்லையாக வைகையாறும் அமைந்துள்ளன. 11 பிள்ளையார்பாளையம் சமயத்தாரின் மூதாதையர் கமுதியரு கேயுள்ள தரக்குடியிலிருந்து மதுரை அருகேயுள்ள பிள்ளையார் பாளையத்துக்குக் குடிபெயர்ந்தவர்கள். கமுதியருகே தரக்குடி, வல்லக்குளம், புனவாசல், சுள்ளங்குடி, அகத்தாரிருப்பு உட்படப் பதினெட்டுக் கிராமங்கள் இவரது சமய ஆட்சிக்குட்பட்டவையாகும் 18 இந்த ஒரு சமயத்தாரையே ஆய்வாளர் சித்திரைத் திருவிழாவில் தலையின் உருமால், மார்பில் துளசிமாலை, இடுப்பில் கச்சை, இரும்புச் சல்லடம், பாசி, கையில் வளை, கருங்காலிக் கம்பு (நாங்குவிக் கம்பு), காலில் வெள்ளித் தண்டை ஆகியவற்றோடு காணமுடிந்தது. 5.2 6. நடைமுறைத் தொடர்பு-சில செய்திகள் : கோயிலுக்கு மாடு கொண்டுவருவோர், திரியெடுத்தாடுவோர், கருத்திநீர் தெளிப்போர் ஆகியோரில் முதுகுளத்தூர், பரமக்குடித

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/101&oldid=1467963" இலிருந்து மீள்விக்கப்பட்டது