பக்கம்:அழகர் கோயில்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கோயிலும் இடையரும் 95 இராமநாதபுரம் வட்டங்களிலிருந்து வருவோர், பெரும்பாலும் இடையர் சாதியினராகவே உள்ளனர். வேடமிட்டு வழிபடும் அடியவரில் பதினைந்து விழுக்காட்டினராக மேற்கூறிய பகுதிகளைச் சேர்ந்த இடையர்களிருப்பதைக் களஆய்வில் அறியமுடிகிறது ஆய்வாளர் சந்தித்த மாடு கொண்டுவருவோரில் இச்சாதி யினரான ஒருவர் இராமநாதபுரத்திற்கு இரண்டு மைல் தெற்கிலுள்ள கீழக்குடிகாடு கிராமத்தினைச் சேர்ந்தவர்,10 ஏழு வயது முதல் தந்தையுடனும், பின்னர் தனியாகவும் மொத்தம் இருபத்திரண்டு வருடங்கள் தொடர்ந்து இக்கோயிலுக்கு மாடு கொண்டுவருகின்றார். கோயிலிலிருந்து இவருடைய ஊர் ஏறத்தாழ எழுபது மைல் தொலை விலுள்ளது. இவ்வளவு தொலைவும் மாட்டுடன் நடந்தே வருகின்றார். தன்னுடைய இருபதாம் வயதில் ஆண்டாரிடம் 'அக்கினி முத்திரை' பெற்றிருக்கிறார். ஆண்டுதோறும் ஒரு மாட்டுடன் கோயிலுக்கு வந்து தீர்த்தந்தொட்டியில்(மலைமீதுள்ள சிலம்பாற்றில் மாட்டினை நீராட்டி, கோயிலில் இறைவனை மாட்டுடன் தரிசித்து, தனக்கும் மாட்டுக்கும் ஆண்டாரிடம் ஆசிபெற்று, ஆண்டாருக்கு ஒன்றேகால் ரூபாய் காணிக்கை செலுத்தித் திரும்புகிறார். தற்போது அவர் கொண்டுவருவது மூன்றாவது மாடாகும்; முதலிரண்டு மாடு களும் இறந்துவிட்டன என்கிறார். ஊருக்குத் திரும்பியவுடன் மாட்டைக் கட்டிப்போடுவதில்லை ஆண்டு முழுவதும் அம்மாடு கட்டப்படாமலேயே அலையும் (படம் 9). வட்டங்களில் இடையர்கள் பரமக்குடி, முதுகுளத்தூர் எண்ணிக்கை மிகுதியான கிராமங்களில், தங்களில் இரண்டு குடும்பத் என்று வைத்துள்ளனர். தினரை முறையே முக்கந்தர், கோவளர் இவர்களை 'முக்கந்தவூடு', 'கோவனமுடு' எனப் பெயரிட்டழைக் கின்றனர். இவர்களில் மூக்கந்தர் வீட்டார் ஆண்டுதோறும் அழகர் கொண்டுவருவது கோயிலுக்குச் சித்திரைத் திருவிழாவில் மாடு வழக்கமாகும். கோவளவீட்டு எருதுக்குக் கிராமத்தில் நடக்கும் தரப்படும். அழகர்கோயிலுக்கு எருதுகட்டு விழாவில் முதலிடம் நேர்ந்து விடப்பட்ட முக்கந்தர்வீட்டு மாடு, ஊரில் யார் வயலில் மேய்ந்தாலும் பிடித்துக்கட்டுவதோ, விரட்டுவதோ இல்லை. அதனை ஒரு பேறாகக் கருதுகின்றனர். 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/102&oldid=1467964" இலிருந்து மீள்விக்கப்பட்டது