பக்கம்:அழகர் கோயில்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

96 5.2.7. இடையரும் வர்ணிப்புப் பாடல்களும்: அழகர்கோயில் சித்திரைத் திருவிழாவில் 'அழகர் வர்ணிப்பு' பாடும் வர்ணிப் பாளர்களில் இடைச்சாதியினரை நிறையக் காணமுடிகிறது. 'வர்ணிப்பாளர் மகாசபை' எனப்படும் வர்ணிப்பாளர் சங்கத்திலும் தொடர்ந்து பதினான்கு ஆண்டுகளாக இச்சாதியினர் தலைவர் பொறுப்பில் இருக்கின்றனர்,21 இச்சங்க வரவு-செலவுப் புத்தகத்தில், 'வர்ணிப்புப் ஆசிரியர்கள்' என்ற பெயரோடு குறிக்கப்படும் பதினொரு வரில் அறுவர் இடைச்சாதியினராவர்.22 இவர்கள் தவிர, 'தசாவதார வர்ணிப்புப் பாடியுள்ள சாமிக்கண்ணுக்கோனார்23 அழகர் அட்டாக்கர மந்திர வர்ணிப்பு' பாடியுள்ள கீழக்குயில்குடி மூக்கன் பெரியசாமிக் கோனார்24 ஆகியோரும் இச்சாதியாரில் வர்ணிப்பு ஆசிரியர்களாக விளங்கியுள்ளனர். 5.2.8. கள்ளர் வேடக் கதை : சித்திரைத் திருவிழாவில் அழகர் ஏன் கள்ளர் வேடம் போடுகிறார்' என்ற கோள்விக்குப் பதிலாக ஒரு தகவலாளி ஒரு கதையினைச் சொன்னார். "ஒருமுறை அழகர் மதுரைக்குச் சித்திரைத் திருவிழாவிற்காக வந்து கொண்டிருந்தார். வழியில் தல்லாகுளம் மாரியம்மன் கோயிலருகில் ஒரு இடைச்சி மோர் விற்றுக்கொண்டிருந்தான். களைப்புத்தீர அவளிடம் மோர் வாங்கிக்குடித்த அழகர், திருவிழா முடிந்து திரும்பும்போது குடித்த மோருக்குக் காசு தருவ தாகச் சொன்னார். ஆனால் திரும்பும்போது கையில் காசில்லாததனால் கள்ளர் வேடம் போட்டுக்கொண்டு தப்பியோடிவிட்டார்' *25 வேடமிட்டு வழிபடும் அடியவரிலும் ஐந்து விழுக்காட்டினர் (அனைவரும் கோனாரல்லாத சாதியினர்) அழகர் கள்ளர் வேடம் போடுவதற்கு இக்கதைச் செய்தியினைப் பதிலாகக் கூறினர். 26 கூர்மாவதாரன் வர்ணிப்பு' நூல், "காத்துட்டு மோருக்கு கள்ளர் வடிவெடுத்த கரந்தமலைக் கண்ணா வா'21 என்று பாடுவதும் இந்நிகழ்ச்சியையே குறிப்பதாகும். அழகரின் கள்ளர் வேடம், கள்ளர் சாதியாரோடு தொடர்பு கொண்டது. இருப்பினும் இக்கதைப் பிறப்பிற்கு ஒரு காரணம் இருந்தல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/103&oldid=1467965" இலிருந்து மீள்விக்கப்பட்டது